'அலுத்கம வன்முறைகள் குறுpத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோமாளித்தனமாக செயற்பட்டார்'
அலுத்கம பேருவளை சம்பவம் தொடர்பில் நம்பிக்கை நம்பிக்கை தீர்ப்பாயமொன்று உருவாக்கப்பட உள்ளதாக சமாதான சக்தி அமைப்பின் பேச்சாளர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அலுத்கம சம்பவம் மட்டுமன்றி ஏனைய கடும்போக்குவாத அமைப்புக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தின் பெயரில் சிலர் கடும்போக்குடைய அமைப்புக்களை நடாத்திச் செல்ல முயற்சிக்கின்றனர் எனவும், உண்மையான பௌத்தர்கள் இனவாதிகள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாகவும், நீதிமன்றச் செயற்பாடுகள் செயலிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலைமையில் உண்மைகளை கண்டறிய மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது பொருத்தமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அலுத்கம சம்பவம் மற்றும் நாட்டில் இடம்பெற்ற இனவாத சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கோமாளித்தனமான கருத்துக்களைத் தவிர வேறு எதுவும் காத்திரமான முறையில் நடைபெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment