Header Ads



'அரசாங்கம், இன­வா­தத்­தினை ஆயு­த­மாக பயன்­ப­டுத்­துகிறது' JVP

இன­வா­தத்­தினை தூண்டி அதன் மூலம் ஆட்­சியை தக்க வைத்­துக்­கொள்­ளவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஊவா மாகாண சபைத் தேர்­த­லிலும் இது விதி­வி­லக்­கல்ல என தெரி­விக்கும் ஜே.வி.பி. இம்­முறை ஊவா மாகாண சபைத் தேர்­த­லிலும் மக்கள் அர­சாங்­கத்­திற்கு தக்க பாடத்­தினை கற்­பிப்­பார்கள் எனவும் குறிப்­பிட்­டது.ஜே.வி.பி. யினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் விஜித ஹேரத் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஏனைய மாகாண சபைத்­தேர்­தலை விடவும் ஊவா மாகாண சபைத்­தேர்தல் அர­சாங்­கத்­திற்கு மிக முக்­கி­ய­மா­னது. தமது ஆட்சி தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அர­சாங்கம் இத்­தேர்­த­லினை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். கடந்த முறை ஊவா மாகாண சபைத்­தேர்தல் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்­பெற்­றது. அதன்­பின்னர் அர­சாங்கம் உட­ன­டி­யாக ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­தி­யது. இம்­மு­றையும் அவ்­வா­றான நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. 2016ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டிய நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்­தலின் முடிவில் அர­சாங்கம் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் உறு­தி­யான முடி­வினை எடுக்கும்.

எனவே, அர­சாங்கம் ஊவா மாகாண சபைத் தேர்­தலை குறி­வைத்து தமது தந்­தி­ரங்­களை பிர­யோ­கிக்கும். இன்று அர­சாங்கம் தேர்­தலில் வெற்­றி­பெ­றவோ தமது ஆட்­சி­யினை தக்க வைத்­துக்­கொள்­ளவோ இன­வா­தத்­தினை ஆயு­த­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது. இது ஊவா மாகாண சபைத் தேர்­த­லிலும் விதி­வி­லக்­கா­ன­தல்ல. எனினும் மக்கள் தெளி­வான முடி­வினை எடுப்­பார்கள். இன்று நாம் பய­ணிக்கும் பாதை மிக மோச­மா­னது. மக்­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது என்­பதை மக்கள் நன்கு உணர்ந்து விட்­டனர். எனவே அர­சாங்­கத்தின் அடா­வ­டித்­த­ன­மான ஆட்­சிக்கும் அடக்­கு­மு­றை­க­ளுக்கும் தக்க பதி­ல­டி­யினை இம்­முறை ஊவா மாகாண தேர்­தலில் மக்கள் வெளிப்­ப­டுத்­து­வார்கள். கடந்த இரு மாகாண சபைத் தேர்­த­லிலும் மக்கள் அர­சாங்­கத்­திற்கு சிவப்பு விளக்கு சமிக்­ஞை­யினை காட்டி எச்­ச­ரித்­துள்­ளனர். அதே­நி­லைமை அல்­லது அதை விட மோச­மான நிலை­மை­யினை இம்­முறை ஊவா மாகாண தேர்­தலில் மக்கள் வெளிப்­ப­டுத்­து­வார்கள் எனவும் தெரி­வித்தார்.

No comments

Powered by Blogger.