பொதுபல சேனா வெற்றியடைந்து விட்டதா..?
(SAFRAN BIN SALEEM)
இன்று தேசிய சூரா சபை வெளியிட்ட ஊடக அறிக்கை, BBS இன் முதல் இலக்கை தெளிவாக காட்டுகின்றது. இது தான் அவர்களின் முதல் இலக்கு என்று சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் அச்ஷெய்க் முர்ஷித் முழFப்பர் அவர்கள் சொன்னதை நான் கேட்டிருக்கின்றேன். ஆம், அவர்களது முதல் இலக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU). அதில் அவர்களது முக்கிய குறிக்கோள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கும் இலங்கை முஸ்லிம்ளுக்கும் இடையிலான தொடர்பை துண்டிப்பது. ஏன்னென்றால் இலங்கை முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாக அவர்கள் செயற்பட்டனர். ஜம்மிய்யா இந்த நாட்டு முஸ்லிகளுக்கு பலவாறான சேவைகளை செய்து வருகின்றது. அவர்கள் செய்யும் அத்தனை சேவைகளையும் பகிரங்கமாக சொல்லி சொல்லி செய்வதில்லை என்பதே உண்மை.
இதில் அவர்கள் வென்று விட்டனர் என்று தான் கருத வேண்டி இருக்கின்றது ஏன் என்றால்,
BBS உம், இலங்கை அரசும் ஏனைய பெரும்பான்மை அமைப்புக்களும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா குறித்து விளங்கிய அளவு கூட எம் சமூகத்தவர்கள் விளங்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் இந்த சமூகத்தை வழிப் படுத்துவதிலும் நெரிப்படுத்துவதிலும் இன்னும் பல துறைகளிலும் சிறப்பாகவே செயற்பட்டனர். அது குறித்து எம் சமூகம் தன் இயக்க வெறி உட்பட பல அமைப்புகளில் அதை நாம் மறந்து விட்டோம். அவர்கள் எதை சொன்னலும் விமர்சிக்க செய்கின்றோம். அவர்களிடம் குறை தேடவே முற்படுகிறோம். அவர்கள் , செய்யாத விடயங்களையும் அவர்கள் செய்ததாக/ சொன்னதாக வதந்திகள் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில் சொல்லப் போனால், அவர்களை விமர்சிக்கவே எமது சமூகம் தயாராக உள்ளது. அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு செய்த, செய்கின்ற அளப்பரிய சேவையினை பாராட்ட அல்லது ஊக்குவிக்க எமது சமூகம் மறுத்தே வருகின்றது.
உலமாக்களை குறை கூறுவதோடு நின்று விடாது இன்று, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அச்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களையும் உலக பயங்கரவாதி ஞானசார வையும் இணைத்து அவர்கள் ஞாபக சின்னங்களை பரிமாறுவது போல ஒரு PHOTO இணை EDIT செய்து இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பிக்கொண்டிருக்கிராகள்.
இவ்வாறு EDIT செய்து பரப்பிக் கொண்டிருப்போரே உங்களிடம் சில வரிகள்:
1. அவ்வாறு EDIT செய்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் அவ்வாறு சந்தித்து ஞாபக சின்னங்களை பரிமாறிக் கொண்டனர் என்பதை நிருபிக்க வேண்டும்???????
2. அவ்வாறு நிருபிக்காவிட்டால் நீங்கள் அவர் மீது அபாண்டம் அவதூறு சுமத்தியவர்கள்.
3. ஜம்மியவின் தலைவர் மீது உங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் அல்லது கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக அவர் செய்யாத ஒன்றை செய்ததாக photo ஒன்றின் மூலம் நீங்கள் பரப்புவதன் நோக்கம் என்ன???
4. அவ்வாறு ஜம்மியவின் தலைவர்சொல்லாத அல்லது ஜம்மிய்யா ஏதேனும் பிழையாக வழிகாட்டி இருந்தால் அல்லது பிழையான கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அந்த வழிகாட்டப்பட்ட விடயத்தை அல்லது பிழையான கருத்தை முறையாக விமர்சிப்பது அல்லது அதன் பிழையை சுட்டிக் காட்டுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. மாற்றமாக அவர் அல்லது அவர்கள் சொல்லாத விடயங்களை அவர்கள் மீது இட்டுக்கட்டவேண்டியதேன்??
5. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவரை இழிவு படுத்துவதாக கருதி அவர்மீது அபாண்டங்கள் சுமத்தி உங்கள் மறுமை வாழ்வை நாசமாக்கி கொள்ளாதீர்கள்.
Post a Comment