இலங்கை இப்படியும் ஒரு சாதனை புரிந்தது..!
வீசா இன்றி பயணம் செய்யக் கூடிய மோசமான நாடுகளின் வரிசைப் பட்டியலில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஹென்லி அன்ட் வீசா வரையறை சுட்டி நிறுவனத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,
மிக மோசமான 20 நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, எரித்திரியா, பலஸ்தீனம், சூடான். நேபாளம், லெபனான், கொசோவோ, சிரியா, தென் சூடான், லிபியா, மியன்மார், ஈரான், வடகொரியா, அங்கோலா மற்றும் டிஜிபோட்டி உள்ளிட்ட நாடுகளும் மிக மோசமான நாடுகளின் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் தமது நாட்டு பிரஜைகள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் உரிமையை முடக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் பின்லாந்து, சுவீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளும் சிறந்த நாடுகளின் வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு உரிய சுதந்திரத்தை இந்த நாடுகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒன்லைன் அரைவல் வீசா மற்றும் வீசா இன்றி பயணிப்பதற்கான காத்திரமான திட்டங்களை இந்த நாடுகள் அமுல்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெள்ளை நிறத் தோல் உடையவர்களக்கு மட்டுமே இவ்வாறான சலுகைகள் வழங்கப்படுவதாகவும், ஏனையவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படுவதாகவும் அதிக நாடுகளுக்கு பயணம் செய்து அனுபவமுடைய இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment