Header Ads



ஆளில்லா ராணுவ டாங்கிகள் தயாரிப்பில் அமெரிக்கா..!

அமெரிக்க ராணுவத்தில், விரைவில், ஆளில்லா கவச வாகனங்கள், டாங்கிகள் போரில் ஈடுபடுத்தப்பட உள்ளன. போர்களின் போது, மனித உயிர் இழப்பை தவிர்க்கும் வகையில், மனித மூளையை போல் சிந்திக்கக் கூடிய கருவிகளை அத்தகைய வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

டிரைவர் இல்லாமல் இயங்கும் வாகன தொழில் நுட்பத்தை, அமெரிக்காவின்,கூகுள் இணையதளம் பின்பற்றுகிறது.அந்த தொழில் நுட்பத்தை போல், அமெரிக்க ராணுவமும், ஆளில்லா கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் தயாரிப்பிற்கு முக்கியத் துவம் கொடுத்து வருகிறது.

எதிர்கால போர்களில், வீரர்கள் உயிரிழப்பை தடுக்கும் வகையில்,இந்த தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்நாட்டின் தெற்கு கரோலினா நகரில் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ வாகன கண்காட்சியில், மணிக்கு, 67 கி.மீ., வேகத்தில் செல்லும், ஆளில்லா வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அது போன்ற தொழில்நுட்பத்தை, கவச வாகனங்களுக்கும் டாங்கிகளுக்கும் பயன்படுத்தி, 2019க்குள் ஆளில்லா டாங்கிகள் தயாரிக்கப்படும் என, அந்நாட்டு ராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.