இஸ்லாமிய ஆடையை களைய வேண்டாம், தண்டம் விதித்தால் பணம் செலுத்துவேன்..!
(Mohamed Naushad)
இந்தப் படத்தில் இருப்பவர் றச்சிட் நெகாஸ். பிரான்ஸில் வசிக்கும் அல்ஜீரிய நாட்டு வர்த்தகர்.
பிரான்ஸில் முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஆடைக் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி அணிந்தால் தண்டப் பணம் செலுத்த வேண்டும். இதைக் கேள்வியுற்ற றச்சிட் ஒரு நிதியத்தை தொடங்கியுள்ளார்.இந்த நிதியத்தில் அவர் ஒரு மில்லியன் பவுண்களை வைப்பில் இட்டுள்ளார். முஸ்லிம் பெண்களே நீங்கள் உங்கள் இஸ்லாமிய ஆடையை களைய வேண்டாம். தொடர்ந்தும் அதை அணியுங்கள். அதற்காக உங்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டால் பிரான்ஸில் அல்ல வேறு எந்த நாட்டிலும் சரி உங்களுக்காக அந்தப் பணத்தை செலுத்த உங்கள் சகோதரனாகிய நான் தயாராக இருக்கின்றேன் என்றும் அறிவித்துள்ளார்.
நல்லது சகோதரரே, இது உங்களது இஸ்லாமிய பற்றைக் காண்பிக்கின்றதா அல்லது பணத்திமிரைக் காண்பிக்கின்றதா? உங்களைப்போல தண்டப்பணத்தை செலுத்த எல்லோராலும் முடியுமா என்ன? தண்டத்திற்காகச் செலுத்தும் பணத்தைச் சேகரித்து அதை இந்தச்சட்டத்தை மேலும் எதிர்த்து போராடுவதற்கு பயன்படுத்தலாமே..?
ReplyDelete