முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - பேசுவதற்கு வெட்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சட்டம், ஒழுங்கின் இன்றைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைமீதான விவாதத்தில் அளுத்கம, தர்காநகர், பேருவளை வன்முறைகள் தொடர்பில் எதிரும் புதிருமான, சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதும் இதில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களோ பிரதியமைச்சர்களோ பங்கேற்கவில்லை.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்வினால் நாட்டில் சட்டம் ,ஒழுங்கின் இன்றைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டு பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6.30 மணிவரையான நான்கரை மணிநேர வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்விவாதத்தில் பிரதான கருப்பொருளாக அளுத்கம, தர்காநகர் ,பேருவளை பகுதிகளில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறையே இருந்தது.
ஆனாலும் இவ்விவாதத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் ,ரிசாத் பதியுதீன் ,அதாவுல்லா, பௌசி, பஷிர் சேகுதாவூத் ,பிரதியமைச்சர்களான பைஸர் முஸ்தபா, ஹிஸ்புல்லா, காதர் மற்றும் எம்.பி.க்கள் பலர் இருந்தபோதும் அரச தரப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர், ஐ.தே.க. எம்.பி.யான கலீம் ஆகியோரைத் தவிர வேறு எவரும் பேசவில்லை.
fasting peole.sorry.com
ReplyDeletedon't know what kind of drama this,
ReplyDelete