மீண்டும் அரங்கேற்றப்படும் காடைத்தனமும், முஸ்லிம் தலைமைகளின் கோழைத்தனமும்...!
(தந்திமகன்)
இனியென்ன இருக்கிறது. கோடிக்கணக்கணக்கான நஷ்டத்தை தாங்கிக் கொண்டு ஒரே இரவில் அனைவருமே அனாதையாக்கப்பட்ட முஸ்லிம்களின் தலைவிதியை என்னவென்று சொல்வது. முஸ்லிம்களைக் காப்பாற்றவும் வாழவைக்கவும் அவர்கள் நம்புகின்ற ஏக இறைவன் ஒருவனால்தான் முடியும். அந்த நிலைமைக்கு வாய்ப்பேச்சில் மாத்திரம் சமூக சிந்தனை என்று வாய்கிழிய பேசுகின்ற அரசியல்வாதிகளை கற்றோர் தொடக்கம் பாமர மக்கள் வரையும் மிகவும் கோபமாக பேசுகின்ற ஒரேவார்த்தை மக்களோடு மக்களாக வந்து சேருங்கள். ஆளுகின்றவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்காமல் வெளியேறுங்கள். ஆனால் கதிரைதான் முக்கியம் என்று கதிரையை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் என்கிற லேபலுடன் இருக்கும்வரை காடைத்தனம் அரங்ககேற்றப்பட்டுக் கொண்டிருக்கும். அதனை தாங்கிக் கொண்டு கோழைத்தனமிக்க முஸ்லிம்தலைவர்களாக இருக்கும்வரை. ஆகவே இந்நாட்டு முஸ்லிம்கள் இவர்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள். இதுதான் உண்மை. இன்று உலகில் எங்குபாhர்த்தாலும் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்படுகின்ற ஒரு கூட்டம் இருக்கும் அதேவேளையில் ஒருசிலர் வால்பிடித்துக் கொண்டு இருப்பதையும் நாம் அறிவோம்.
எமது இந்த சின்னஞ்சிறு நாட்டைப் பொறுத்தளவில் இனரீதியான பிளவுகள் இன்றுநேற்றல்ல. தொண்டுதொட்டு இருந்து வருகின்றது. ஆளுகின்ற அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்களைத் தடுத்து நிறுத்தி எல்லோருமே இந்நாட்டு மக்கள் என்கிற பற்றினை பெரும்பான்மையினருக்கு இடித்துரைத்து சமாதானப்படுத்துவார்கள். சிலவேளைகளில் அதே அரசியல்வாதிகள் சிறுபான்மையினரைத் தாக்கி அழிக்கவும் ஏவுவார்கள். மக்களின் விகிதாசாரப்படியான தொழில்வாய்ப்புக்கள்ää கல்வியில் தரப்படுத்தல்ää பெரும்பான்மைää சிறுபான்மை என்கிற பேதங்கள் கரைபடிந்தவைகளாக இருந்தமையினால்தான் தமிழர்களில் ஒரு குழுவினர் நியாயத்திற்காக போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் பங்குகொண்டவர்கள்மீது காலிமுகத்திடலில் குதிரைகளாலும் ஆயுதப்படையினரின் துப்பாக்கிகளாலும் இடிக்கப்பட்டனர். ஒடுக்கப்பட்டனர். இதனைக் கண்டு வேதனைப்பட்ட இளைஞர்கள் குழு ஒன்று சேர்ந்து நியாயத்தை ஆயுதரீதியில் முன்வைக்கத் தலைப்பட்டதன் விளைவு இந்நாடு சின்னாபின்னமாகியது. அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் ஒரு இனத்தை அடக்க முற்படுகின்றபோது அது எதிர்வாதமாகää புயலாக மாறும். அந்தப் புயலிலின் பிடியிலிருந்து யாருமே தப்பமுடியாது. இதுதான் யதார்த்தமாகும்.
பேருவலைää அளுத்கம போன்ற பிரதேசங்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு இடத்திலும் முஸ்லிம்களுக்கோää தமிழர்களுக்கோ சம்பவங்கள் எதுவுமே நடைபெறாது என்கிறவகையிலான வாய்ப்பேச்சில் மாத்திரம் ஒப்பந்தங்கள் பேசப்பட்டன. ஆனால் ஒப்பந்தங்கள் எல்லாம் வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரம்தான் என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். கொழும்பிலுள்ள முஸ்லிம்களின் பழைமை வாய்ந்த பள்ளிவாசலையும் பேரினவாதிகளின் அனுங்குப்பிடி விடுவதாய் இல்லை. கொழும்புää கோட்டை சதாம் வீதியிலுள்ள மஸ்ஜிதுக்கு பன்றி இறைச்சியுடனான அச்சுறுத்தல் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அக்கடிதத்தில்; அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இந்த மஸ்ஜித் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அச்சுறுத்தி எழுதப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தொடரும் அச்சுறுத்தல்கள் இன்று முழு இலங்கையையும் விட்டுவைப்பதாக இல்லை. அரசு கடந்த யுத்த காலத்திலும்ää இறுதி யுத்தத்தின்போதும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஐ.நாடுகளின் ஜெனிவாக் களத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் உள்நாட்டினுள் கலவரங்களும்ää பேரினவாதக் கூக்கூறல்களும் ஒலிக்குமாக இருந்தால் பிரச்சினை வேறுபக்கம் திசை திருப்படலாம் என்பதற்கான ஒத்திகை பார்க்கும் படலமாகவே பேருவலைää அளுத்;;;கம சம்பவங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில இணையத்தளங்கள் கூறுகின்றன. எது எப்படியிருப்பினும் அரசுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கொக்கரிக்கத் தொடங்கியுள்ளன.
ஆளும் அரசுக்குள் முக்கிய அமைச்சுப் பதவியை வகிப்பவரான டாக்டர் ராஜித சேனாரட்ன அவர்கள் நியாயமான கருத்தொன்றினைத் தெரிவித்திருந்தார். புத்திசாலித்தனமான தலைவர்கள்தான் இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும். இனப்பற்று எனக் கூறிக்கொண்டவர்கள்ää அளுத்கம பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்களை வெளியில் எடுத்தவர்கள்ää அவற்றை தமது வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இது சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள நோய். புத்திசாலிகளுக்கும்ää புத்திசாலித்தனமான தலைவர்களுக்குமே இந்த நோயை சமூகத்தில் இருந்து குணப்படுத்த முடியும். சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களை இனவாத பிரச்சினையாக்க முயற்சித்து வருகின்றனர். அந்த சேனாää இந்த சேனா என்று பல பக்கங்களில் இருந்து சேனை உருவாகி வருகின்றன. கடந்த காலங்களில் இந்த சேனாக்கள் எதுவும் இருக்கவில்லை. என்றும் கூறினார். அப்படியானால் புத்திசாலித்தனமிக்க தலைவர்கள் இன்று மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டனரா? என்கிற கேள்வியும் இதில் ஒழிந்துள்ளது.
மேலும்ää இந்த சேனாக்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற அழிவுகளால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் இந்த அழிவுகளை சீர்செய்து கொடுக்கும். ஆனால் சிலரது புத்திசாலித்தனமற்ற செயல்களால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது. 52 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்கு கூட எவருமில்லை. சிலர் நன்றாக சாப்பிட்டு ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பவர்கள் தாமும் அப்படி இருக்க முயற்சிப்பதில்லை. பொறாமைப்படுகின்றனர். புத்த பகவான் வாழ்ந்த காலத்திலும் இப்படியான அழிவுகளை ஏற்படுத்தும் நபர்கள் இருந்துள்ளனர். நாம் சிலவற்றை புதிதாக நிர்மாணிக்கும் போது சிலர் அவற்றை உடைத்து போடுகின்றனர். கடைகளை உடைத்து அவற்றை வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர் எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையில் எல்லாவற்றுக்கும் பெறாமைதான் காரணம். இந்தப் பொறாமையானது இந்நாட்டில் வர்த்தகத் துறையில் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் முள்ளந்தண்டினை உடைப்பதற்கான முயற்சிகள்தான் இவை. கடந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் பேருவலை சீனன்கோட்ட பிரதேசத்தில் செல்வாக்குமிக்கவராக இருந்த நளீம் ஹாஜியாரை சிறையில் அடைத்து அவரது சொத்துக்களையும்ää செல்வாக்கையும் உடைக்க முற்பட்டனர். அந்த தொடரின் மற்றொரு அங்கமாகவே இதனைப் பார்க்க முடிகின்றது. எப்போதுமே இலங்கையில் மிகவும் செல்வாக்குமிக்கதும்ää வர்த்தகத் துறையில் கொடி கட்டிப்பறக்கின்றவர்களையும் கொண்டுள்ள இப்பிராந்தியத்தினை மண்கௌவச் செய்வதே இவர்களின் நோக்கமாகும். அதனை செய்து முடித்துள்ளனர்.
இதற்கு ஒத்தூதும்படியாக சில ஊடகங்களும் தன்னுடைய பேரினவாதப் போக்கினை கொண்டுள்ளமை ஊடகத்துறைக்கே இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அளுத்கம வன்முறையின் உண்மை நிலைவரத்தை வெளிவர விடாது அரசு தனது தவறுகளை மூடி மறைப்பதற்காகவே உத்தியோகபூர்வமற்ற ஊடக தணிக்கையை விடுத்தது. மேலும் இத்தணிக்கையானது ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை குறித்த கலவரத்திற்கு முன்பும்ää பின்பும் பிராந்திய ஊடகவியலாளர்கள் பெருமளவில் தாக்குதலுக்கு உள்ளாகினர். இது தொடர்பில் நவிப்பிள்ளையின் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச அமைப்புகளுக்கு விரைவாக தெளிவுபடுத்த போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை உருவெடுத்துள்ளது. அரசு ஊடகத்துறையை முழுமையாக இல்லாமல் செய்ய பார்க்கிறது. அரசாங்கம் ஊடகங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு செயற்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டே அளுத்கமää பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறையையடுத்து அரசாங்கம் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊடக தணிக்கையை பிரகடனப்படுத்தியது. குறித்த கலவரங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை பிரசுரிக்கக்கூடாது என்பதற்காகவே அரசு இவ் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தியது எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அனைத்துப் பக்கங்களும் நாட்டில்வாழும் மற்றறொரு பிரஜையை நசுக்க முற்படுகின்ற அரசுக்குள் இருந்து கொண்டு முஸ்லிம் தலைவர்கள் எதனைச் சாதிக்க முயற்சிக்கின்றனர். கடந்த அநுராதபுரத்தில் பேரினவாதிகளால் உடைக்கப்பட்ட முஸ்லிம் ஸியாரத்தைப் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்போது இவ்வாறு பேசியிருந்தார். அதாவது ‘அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால்ää இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்’ என்று அப்போது கூறியிருந்தார்.
அதேகாக்கிக் சட்டைகள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு பிரதேசமே பற்றி எரிந்தது. நாசமானது. வெறும் சியாரத்திற்கு நீதிமன்றம் செல்வேன் என்றுகூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பேருவலையைப் பார்த்து கண்ணீர் விட்டதாக பத்திரிகைகள் கூறின. ஆனால் எல்லாமே வெறும் நடிப்பு. இன்று இவரால் நீதிமன்றத்திற்கு போகத்தான் முடியுமா? ஆட்சிக்கதிரையைத்தான் விட முடியுமா? மின்னலில் ரங்காவின் கேள்விகளால் வாயடைத்துப் போன முஸ்லிம் தலைவர்கள் இனியென்ன செய்வதெனத் தெரியாது மக்களின் மனங்களில் குழப்பத்தை உண்டுபண்ணி மீண்டும் அரசுக்கு வாக்கு வங்கிகளை சேமிக்க முற்படுகிறார்கள் என்பதுதான் உண்மையாகும். இதனை இப்போது மக்கள் நம்பத்தயாரில்லை.
அளுத்கம பிரதேச பிரச்சினைகளை காண்பதற்கு நமது ஜனாதிபதி சென்றபோது அங்கு இரண்டு முஸ்லிம்களைச் ஜனாதிபதி சந்தித்தாகவும் அதன் பின்னர் இச்சம்பத்தைப் பற்றி இன்னொரு பக்கமும் உண்டு என்றும் கூறியிருந்தார். அதாவதுää எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எமது வீடுகளை உடைக்கவில்லை தூரத்திலிருந்து வந்தவர்களே எம்மைத் தாக்கினர் என்று அவர்கள் கூறியதாக கூறியிருந்தார். அதாவது இதன் பின்புலத்தில் நிற்பவர்களை அறிந்து கொள்ளவேண்டும் எனவும்ää முஸ்லிம் மக்களை அரசாங்கத்திடமிருந்து அந்நியப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் மிக நுணுக்கமாகச் செயற்பட்டுவருவதாகவும்ää இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் எனவும்ää ஜனாதிபதிää அமைச்சர்களையும் எம்பிக்களையும் மோதவிட்டுப் பார்க்கும் நடவடிக்கையை ஐ.தே.க மிக லாவகமாக மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். என்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து அவர்கள் மனதை அறிந்து செயற்படுபவன் நான். அதனால் எதிர்வரும் தேர்தல்களில் எமது வெற்றி உறுதி. நாம் குரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அதேவேளை அரசியல் பழிவாங்கல் எம்மிடம் கிடையாது எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார்.
எனவேää இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தமது அரசு பொறுப்பல்ல என்று கூறும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் பொதுபலசேனாவின் வழித்துணையுடன் பாதுகாப்புத்தரப்பினர்; பார்த்துக் கொண்டிருக்கின்றபோது எம்மைத் தாக்கினர் என்று கூறுவதன் மர்மம் புரியவில்லை. இதன் பின்னணியில் அரசு நிற்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது என்று கூறுவோருக்கும்ää பாதிக்கப்பட்ட மக்களும்ää எதிர்காலத்தில் மேலும் பாதிக்கப்படப்போகின்ற முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புää உத்தரவாதங்களுக்கு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைமைகள் கூறப்போகின்ற காரணங்கள் என்ன என்பதையும் கூறியே ஆகவேண்டும். இனியொருவிதி செய்வோம் என்று முஸ்லிம்கள் கூறுவதற்கு முன்னர் மேலும் அரங்கேற்றப்படப் போகின்ற ஆட்டங்களுக்கு முன்னராக முஸ்லிம் தலைமைகள் மீண்டும் கோளைத்தனமாக இருக்க முற்படுவார்களாக இருந்தால் ஆட்டம் வேறுவிதமாக மாற்றம் அடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.
Ooohhh..Dear Thanthimagan......you don't know they told this is the mistakes of the Government....not the Musilim....Mandiris & Empies....They are members of parliment & ministers in another country not in Sri lanka....oh my god...
ReplyDelete