ஞானசாரருக்கு அவுஸ்திரேலியா வீசா..?
அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய வீசாக்களை இரத்துச் செய்திருந்த நிலையில், அவுஸ்திரேலியா அவருக்கு வீசா வழங்கியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டுக்கு விஜயம் செய்ய தேரருக்கு வழங்கியிருந்த வீசாக்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அண்மையில் இரத்துச் செய்தன.
இப்படியான பின்னணியில், அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த முன்னுதாரணத்தையும் கவனத்தில் கொள்ளாது ஞானசார தேரர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்வதற்கான வீசா அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார தேரர் இந்த வருட ஆரம்பத்தில் கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வீசாவுக்கான விண்ணப்பத்தை செய்திருந்ததுடன் தூதரகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதனால் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.
இதனையடுத்து பிரான்ஸ் தூதரகத்திற்கு சென்ற ஞானசார தேரர், அமெரிக்கா தனக்கு ஐந்து வருடங்களுக்கான மல்டிபல் வீசாவை வழங்கியுள்ள நிலையில், பிரான்ஸ் தூதரகம் விண்ணப்பத்தை நிராகரித்தது அநீதியானது என வாதிட்டிருந்தார்.
அமெரிக்கா வீசா இருக்கும் காரணத்திற்காக மாத்திரம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் செனகன் வீசா கிடைக்காது என தூதரக வீசா அதிகாரி ஒருவர் ஞானசார தேரருக்கு பதிலளித்துள்ளார்.
This is what you all come to know gottabaya is good connection with Australia government recently , so he help to get australia visa to ganasara, any way when he go to Australia our brothers are there they will look after him,,
ReplyDeleteஅழிவோ , அறிவோ அவுஸ்திரேலியாவில் தான் என்று அல்லாஹ் நாடி இருந்தால், அதை யாராலும் தடுக்க முடியாது..!
ReplyDelete