இலங்கை முஸ்லிம்கள் பற்றி, சர்வதேச முஸ்லிம்கள் அச்சத்தை வெளியிடுகின்றனர் - சவூதி தூதுவர் கிருஸ்ணமூர்த்தி
இலங்கையில் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதாக இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான தூதுவர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சவூதியில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வில் பங்கேற்ற அவர், இந்த தகவல்களை வெளியிட்டார்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர். எனினும் இலங்கையில் தீவிரவாத்துக்கு இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் நாட்டு பற்றுள்ள முஸ்லிம்களே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாக குறிப்பிட்டார்.
இதேவேளை நிகழ்வில் பங்கேற்ற இலங்கையில் இருந்து சவூதிக்கு சென்று பணிபுரியும் இலங்கையர் ஒருவர், அளுத்கமையில் வன்முறைகள் நிறைவுப்பெற்று தமது குடும்பமும் மீள வீடு திரும்பிவிட்டது எனினும் அங்கு பதற்றம் தணியவில்லை என்று குறிப்பிட்டதாக அரப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
அரச நாய்கள் எங்கு போனாலும் அரசுக்கு வக்காலத்து வாங்காமல் இருக்காது.இவரின் குருட்டு தனமான பேச்சை செவிடர்களா கேட்டார்கள்?இவரை கூப்பிட்டு இப்தார் வைத்து அவமானத்தை வேண்டிக்கொண்டார்கள் இப்தார் ஏற்பாட்டாளர்கள்,சபையில் இருந்த எவனும் இதை தட்டி,இவரைன் பேச்சுக்கு எதிப்பேச்சு கொடுக்காமல் அப்படியே மௌனமாய் இருந்ததன் நோக்கம் என்ன?உங்களின் இரத்தங்கள் உறைந்து விட்டடனவா?
ReplyDeletewhat achcham..r u foolish...?
ReplyDelete