மக்காவுக்கு அசாதாரண ஆடையுடன் வந்தவர் கைது
புனித மக்கா பெரிய பள்ளிவாசலுக்குள் இரு தினங்களாக அசாதாரண உடையுடன் நுழைந்த 40 வயது நபர் ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவர் பின்னர் விசாரணை மற்றும் அரச தரப்பு வழக்கறிஞர் அலுவல கத்திற்கு மாற்றப்பட்டார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த நபர் அசாதாரண ஆடையுடன் மக்கா பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைந்துள்ளார். அவரது ஆடை பல யாத்திரிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரை சூழ்ந்துகொண்ட மக்கள் புகைப்படம் பிடிக்க ஆரம்பித்ததால் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஏனையோருக்கு இடையு+று ஏற்பட்டது என்று மக்கா பொலிஸின் உத்தியோக பு+ர்வ பேச்சாளரான லுதினன் கொலனல் அத்தி அல் குரே'p குறிப்பிட்டுள்ளார்.
யாத்திரிகர்களை இடையு+று செய்யாமல் பொருத்தமான ஆடையை அணிந்து வரும்படி குறித்த நபருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அடுத்த தினமான புதன்கிழமை மாலையிலும் அதே ஆடையை அணிந்து புனித பள்ளிவாசலுக்குள் நுழைந்ததை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்ட மிடப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment