பாலஸ்தீன இளைஞரை உயிருடன் எரித்து கொலைசெய்த இஸ்ரேல்
இஸ்ரேலை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தை சேர்ந்த முகமது அபுகாதர் (19) என்ற வாலிபர் இஸ்ரேல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
அவர் கடந்த 2–ந்தேதி ஜெருசலேம் காட்டில் தீக்காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதனால் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனியர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பழிக்கு பழிவாங்கவே வாலிபர் கடத்தி உயிருடன் எரித்து கொல்லப்பட்டதாக கருதினர். அதை தொடர்ந்து ஜெருசலேமில் கலவரத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு இஸ்ரேலில் உள்ள திரா, கலான்சுவா உள்ளிட்ட நகரங்களில் கார்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். ரோடுகளில் டயர்களை தீயிட்டு கொளுத்தினர்.
கலவரக்காரர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தினர். அதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
Post a Comment