ரவூப் ஹக்கீடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் பேருவளை மற்றும் அலுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.இந்த சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் அதற்கு வெளியேயும் அமைச்சர் ஹக்கீம் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தின் போது உயிரிழந்த இரண்டு முஸ்லிம்களினதும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார்.உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.இரண்டு முஸ்லிம்களும் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்த போதிலும் அறிக்கையில் வாள் வெட்டு காரணமாக உயிரிழந்துள்ளதாக காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
பின்னர் வெளியிடப்பட்ட மற்றுமொரு அறிக்கையில் ஒருவரின் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் எனவும் அதனை நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்ள சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் அனுமதி கோரத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி விரைவில் அமைச்சர் ஹக்கீமை புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்யலாம் என எதிர்பர்ர்க்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸே பேருவளை, அலுத்கம சம்பவங்களுக்கு காரணம் எனவும் அமைச்சரிடம்; விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி பயங்கரவாதிகளே நாட்டை ஆழ்கின்றாகள்.
ReplyDeleteHello Renees, அப்ப இந்த ஆட்சியில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும் எம்பிகளும் பயங்கரவாதிகளுடன் கூட்டு சேந்துள்ளர்கள் என்று கூறுங்கள். பொது மக்கள் சிந்திக்க வேண்டிய விடயம்.
ReplyDelete