Header Ads



ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் கீழ், பௌத்தர்கள் சர்வதேச ரீதியாக அவமானபட்டுள்ளனர் - ஹெல உறுமய

அரசாங்கத்தின் மௌனம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பௌத்த மக்கள் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் சர்வதேச ரீதியாக அவமானத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அளுத்கம மற்றும் பேருவலை சம்பவங்களின் பின்னர் நாட்டின் சிங்கள பௌத்த மதத்தவருக்கும், மதகுருமாருக்கும், பௌத்த அமைப்புக்களுக்கும் எதிராக பாரிய பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவத்தின் உண்மை தன்மையை நாட்டிற்கும் உலகிற்கும் மறைக்கும் வகையில் ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற தணிக்கை இதற்கு ஏதுவாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலைமையை மறைப்பதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் யாரென கேள்வி எழுப்பியுள்ள அவர், சட்ட நடவடிக்கைகள் பக்கசார்பான முறையில் இடம்பெறுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டிற்கு, அரசாங்கத்திற்கு மற்றும் பௌத்த மக்களுக்கு எதிராக அமைச்சர் ரஃப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் செயல்பட்ட விதம் தொடர்பில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை எனவும் அந்த கடிதத்தில் ஓமல்பே சோபித்த தேரர சுட்டிக்காட்டியுள்ளார்.

4 comments:

  1. பின்ன உம்மபோல துவேச நோயாளிகள் நாட்டில் அதிகம் இருக்கும் வரை பெளத்தர்கள் அவமானம் மட்டுமா படுவார்கள் இனுமேலும் கஸ்டங்களை படுவேண்டிய அழவிற்கு செய்திருக்கின்றீர்களே. உமக்கும் பகுத்தறிவுக்கும் மிகவும் தூரமோ.

    ReplyDelete
  2. If u stop BBS activities you are a good clergy but you not real Buddhist

    ReplyDelete
  3. IWANUM ORU PAYANKARAWATHITHAN MANCHAL UDA ANINTHAL HAMADHURU AAHA MUDIYUMA IWANUM IW@NDA KOOTTMUM PAYANKARAWATHIKAL LTTE YA MATTUM THAN ILLAMAL ALIKKIKAPPTTU IRUKKU AANAL TERE PAYANKARA WATHIKALAI ADAKKAEILLAI MTHALIL GOVER..KAVI PAYSNKARA WATHIKALAI ADAKKAWENDUM KAVI PAYANKARA WATHIKALAI URUWSKKIYATHU ARASSNKAM KADASIYIL INTHS KAVIKALALTHAN ARSSANKATHTHUKKU ALIYU ARASANKATHTHUKKUL ETHTHINA PAYANKARAWATHA IYAKKAM KOODUKETTA MUTTAL ARASANKAM .

    ReplyDelete
  4. To Musthaffa Jawfer,

    'அவன் இவன் 'என்று மதகுருமார்களை ஒருமையில் அழைத்து நம்முடைய பண்பாடுகளை சேதப்படுத்திக்கொள்ள வேண்டாம் நண்பர்களே!

    அவர்கள்தான் தாங்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டு அவமானப்பட்டு விட்டதை வாக்குமூலம் தருகின்றார்களே. பிறகு நாம் ஏன் செத்த பாம்புகளை அடிக்க வேண்டும்?

    அன்பையும் பற்றின்மையையும் போதித்த புத்த பகவானுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு கவிஞர் கண்ணதாசன் கூறியது போல, புலி மார்க் சீயக்காய்த்தூளில் புலிக்கும் சீயக்காய்க்கும் உள்ள சம்பந்தம்தானே தவிர வேறில்லை.!

    ReplyDelete

Powered by Blogger.