இஸ்லாமிய தேசப் பிரகடனமும், பூகோள அரசியல் நெருக்கடிகளும் - சில அவதானங்கள் ..!
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
அன்று சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படைகளுடன் ஆப்கானிஸ்தான் ஜிஹாத் குழுக்கள் போரிட்ட பொழுது அரபு முஸ்லிம் நாடுகளும் பூரண ஆதரவை வழங்கின குறிப்பாக அமெரிக்காவின் நேச நாடுகளூடாக உசாம பின் லாடன் போன்ற ஒருங்கிணைப்பாளர்களூடாக எல்லைகள் கடந்த போராளிகளும் புறப்பட்டுச் சென்று போரிட்டனர். அரபு முஸ்லிம் நாடுகளையும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களையும் முன்நகர்த்துவதில் அன்றைய வல்லரசு ஒன்றை வீழ்த்துவதில் அமெரிக்கா நேரடியாகவும் மறை முகமாகவும் கணிசமான பிரதான பங்களிப்பினை செய்தது.
சோவியத் ரஷ்யாவின் புதைகுழியாக ஆப்கானிஸ்தான் மாறியது அமெரிக்க சோவியத் பனிப்போர் முடிவுக்கு வந்ததுடன், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் ஒன்று பட்ட இஸ்லாமிய தேசத்தை நிறுவ தவறியமையினாலும் தங்களுக்கிடையில் போரிட்டுக் கொண்டதாலும் அமெரிக்க பாகிஸ்தான் ஈரான் போன்றநாடுகளின் செல்வாக்கு அங்கு அதிகரித்ததாலும் பிற்காலத்தில் தாலிபான் எனற புதியதொரு குழு தோற்றுவிக்கப்பட்டது இவர்களுக்கு எந்தெந்த சர்வதேச பிராந்திய சக்திகள் உதவினர் என்பது உலகறிந்த விடயமாகும்.
பின்னர் தமக்கு கட்டுப்படாத சக்திகளை ஒழிப்பதற்கு 9/11 பிறகு புதிய உலக ஒழுங்கு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் பின்லாடனை தேடுதல் என பிராந்தியத்தில் அமெரிக்காவும் நேச நாடுகளும் புரிந்த அடாவடித்தனங்கள்எமக்குத் தெரியும்.
இதே போன்று ஆயத்துல்லா கொமைனியின் ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் சதாம் ஹுசைனைத் தூண்டிவிட்டு ஈரான்ஈராக் போரை முடுக்கிவிட்ட அமெரிக்காவும் நேச நாடுகளும் வளைகுடா அரபு நாடுகளும் பின்னர் குவைத் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் சத்தாம் ஹுசைனை தேடி அழிப்பதாக கூறி மலையைக் கில்லி எலியைப் பிடித்து முழு ஈராக்கையும் பிணக் காடாக்கி விட்டனர்.
சூனியம் செய்தவர்களுக்கே திரும்புவது போன்று இன்று முழு ஈராக்கும் ஷீயாக்களின் செல்வாக்கின் கீழ்வந்திருப்பதோடு ஈரான் சிரியா ஈராக் ஆகிய பாரிய பிரதேசங்களில் அவர்களது செல்வாக்கை அதிகரிக்கச் செய்துள்ளது, பிராந்தியத்தில் ஷியாக்களின் அதிகரித்துவரும் செல்வாக்கில் அச்சம் கொண்டுள்ள அமெரிக்காவும் இஸ்ரவேலும் வளைகுடா நாடுகளும் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டுள்ளன.
உண்மையில் பிராந்தியத்தில் இடம் பெரும் ஷியா சுன்னி அதிகார போட்ட போட்டியினை தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதில் அமெரிக்க இஸ்ரேல் உற்பட நேச சக்திகள் மிகவும் அவதானமாக இருக்கின்றன, சிரியாவில் அரபுவசந்தத்திற்குப் பின்னர் சுன்னிப் போராளிகளை ஊக்குவிப்பதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரபு வளைகுடா நாடுகள் தலையிட்டு ஓரளவு வெற்றியும் காண இருக்கின்ற நிலையில் இரானுடன் புரிந்துணர்வுக்கு வந்த அமெரிக்க அமெரிக்கா இரத்தக் காட்டேரி பஷாரை அதிகாரத்தில் வைத்திருக்க உடன்பட்டு மத்திய கிழக்கில் புதிய மூலோபாயநகர்வுகளை மேற்கொண்டு வருவதால் அரபு நாடுகள் அச்சமடைந்துள்ளன.
ஏற்கனவே ஈரானில் ஷியா ஜனாதிபதி நூரி அல்மாலிகியின் ஆட்சியில் சுன்னி முஸ்லிம்கள எதிர்கொண்டுள்ள அடக்குமுறைகள் வரத்து ஆட்சிக்கு எதிராக இன்று வெடித்துள்ள உள்நாட்டுக் கிளர்சிகள் என்பவற்றிற்கு மத்தியில் தான் அபூ பக்கர் பக்தாதி என அழைக்கப்படும் இப்ராஹீம் அல அவ்வாத் எனும் போராளியின் தலைமையிலான ஈராக் சிரியா (ஷாம்) அடங்கலான இஸ்லாமிய தேச படை புறப்பட்டது.
உண்மையில் ஈராக் இன்று பல தேசங்களின் தலை விதியை நிர்ணயிக்கின்ற கேந்திர முக்கியத்துவமான நாடாக மாறியுள்ளது துருக்கி சிரியா ஜோர்தான் இஸ்ரவேல வளைகுடா அரபு நாடுகள் ஈரான் என நேரடியாக பல நாடுகளின்பிராந்திய நலன்கள் தொடர்பு பட்டிருந்தாலும் அத்துணை இழுபறிகளுக்கும் அப்பால அமெரிக்காவினதும்இஸ்ரவேளினதும் நலன்களுக்கு ஏற்பவே சகல தரப்புக்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலவந்தமாகவோ ஒத்துழைப்பு கலுடனோ முன் நகர்த்தப் படுகின்றன.
இந்த நிலையில் ஈராக் ஷாம் இஸ்லாமிய தேசப்படயினர் மீண்டும் ஒரு தலிபானாக தம்மை உலகிற்கு காட்டியுள்ளனர் இவர்கள் சிரியாவில் பஷார் அல் அசதிற்கும் ஈராக்கில் மாலிகியிற்கும் எதிராக போர் பிரகடனம் செய்துள்ளனர்,மேற்படி ஷீய தலைமைகளின் அடக்குமுறைகளை தகர்த்தெறியும் சும்ன்னிப் போராளிகளாக தங்களை அறிமுகம் செய்துள்ளனர். இன்று அவர்கள் புதியதோர் இஸ்லாமிய தேசத்தை உலக வரைபடத்தில் அடையாள படுத்தியுள்ளனர்.
அவர்களது உளத்தூய்மை , சர்வதேச பிராந்திய சக்திகளின் நலன்களை தமக்கு சாதகமாக கையாளுதல் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுதல் என்பவற்றில் தனிப்பட்ட முறையில் அவர்களை குறைகாண முடியவில்லை , என்றாலும் இறுதித் தூதர் எதிர்வு கூறிய ஒரு படை தாம் என தம்மை அடையாள படுத்திய விதம்,மற்றும் உலக முஸ்லிம்களின் விசுவாசப் பிரமானத்திற்குரிய கலீபாவாக ஒருவரை பிரகடனம் செய்தமை , இஸ்லாமிய கிலாபத் தோன்றிவிட்டதாக பரப்புரை செய்கின்றமை என்பவற்றை அங்கீகரிக்க முடியாதுள்ளது.
என்றாலும் பலஸ்தீனில் காஷ்மீரில் போஸ்னியாவில் ஆப்கானிஸ்தானில் என உலகின் பல பாகங்களிலும் தமது விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களைப் போல் அவர்களையும் எல்லாம் வல்ல அல்லா அங்கீகரித்து காத்து அருள வேண்டும் என என் மனம் பிரார்த்திக்கிறது..!
ஒன்றுபட்ட ஈராக்கில் சிரியாவில் சுன்னி முஸ்லிம்களுக்கு மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வலுப் போராட்டத்தில் சமநிலையைக் கொண்டு வரவும் உண்மையானதொரு இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வரவும் மேற்படி போராளிகள் காரணமாக இருப்பின் அதுவே மிகப் பெரியவெற்றியுமாக இருக்கும்.
வட ஆபிரிக்க நாடுகளில் திட்டமிட்ட அடிப்படையில் அரபு வசந்தத்தை முடுக்கிவிட்டு காவுகொண்ட மேலைத்தேய சிலுவை மற்றும் சியோனிச சக்திகள் மிகவும் கவனமாக தமது மூலோபாய நகர்வுகளை மத்திய கிழக்கில் சிரியாவூடாக ஈராக்கிற்கும் நகர்த்தி தமது ஆக்கிரமிப்பு படைகளுக்கு பதிலாக பிராந்தியத்தில் ஷியா சுன்னி சர்ச்சைகளை மூலதனமாக்கி அணு ஆயுத சர்ச்சையில் அகப்பட்டுள்ள ஈரானையும் இலக்கு வைத்து தமது சதிமுயற்சிகளை அரங்கேற்றியுள்ளமை புலப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நேச நாடுகளும் மாத்திரமன்றி சுன்னி இஸ்லாத்தின் காவலர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட வளைகுடா குட்டி சுல்தான்களின் சாம்ராஜயங்களும் அரபு வசந்தத்திற்கு முன்னரும் பின்னரும் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் இருப்பை விட தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கேபோராளிகளை கையாளுகிறார்கள் எனற கசப்பான உண்மை ஒரு புறமிருக்க எகிப்திலும் துருக்கியிலும் இன்னும் இஸ்லாமிய கிலாபத்தை யாசிக்கும் பல தேசங்களிலும் இஸ்லாமிய எழுச்சிக்கு எதிராகவே செயற்படுகின்றார்கள் என்பதனையும் முஸ்லிம் உலகு அறிந்து வைத்துள்ளது.
அவர்களது போராட்ட எல்லைகளுக்கு அப்பால் அடுத்த தேசங்களை ஆக்கிரமிக்கப் போவதாக இஸ்லாமிய கிலாபத்தை பிரகடனப் படுத்தப் போவதாக வரை படங்களை வெளியிடுவது சவால்களை விடுவது முஸ்லிம் உம்மத்தை மென் மேலும் அழிவுகளுக்கு மாத்திரமே இட்டுச் செல்லும் குறிப்பாக இலங்கை இந்திய போன்ற நாடுகளில் சிறுபான்மையாகவாழும் மக்களுக்கு ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் ஆர்வக் கோளாறையும் ஏற்படுத்துகின்ற வரைபடங்கள் அங்கு போராடும் அவர்களுக்கோ இங்கு உரிமைகளுக்காக போராடும் எங்களுக்கோ எந்த விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை.
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய தேசம் நிலைக்கக் கூடாது என்றோ, அது முறை கேடானது என்றோ,பிரகடனமோ செய்தவர்கள் சிலுவை சியோனிச சக்திகளின் கைக்கூலிகள் என்றோ, அவர்கள் கூலிப்படைகள் என்றோ நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன், அவர்களது உள்ளங்களை அல்லா ஒருவனே அறிவான்..முதுகெலும்புள்ள ஒருஇஸ்லாமிய தேசத்தை அவர்கள் கட்டி எழுப்ப விரும்புவார்களாயின் இன்ஷா அல்லாஹ் பிராந்தியத்தில் தீய சக்திகளுக்கு எதிராக போராடுவார்களாயின், நாளை பலஸ்தீனை மீட்கும் போரில் பங்கு கொள்வார்களாயின் அவர்களை வழி தவறியவர்கள் என்று சொல்வதற்கு எனக்கு என்ன அருகதை இருக்கிறது.
இஸ்லாம் இயற்கை நியதிகளுக்கு மதிப்பளிக்கிறது, இயற்கை நியதிகளை முற்றாக மறுதலித்து அற்புதங்களை மாத்திரம் நம்ப வைத்து இஸ்லாமிய கிலாபத்தை உலகில் தோற்றுவிக்க முடியாது, இஸ்லாம் வலுச் சமநிலையைவலியுறுத்துகிறது , இஸ்லாமியத் தூதை மனித குலத்திற்கு முனவைக்குமாறு சொல்கிறது, பூகோள பிராந்திய அரசியல் கெடுபிடிகள் நகர்வுகள் அவற்றின் பின்னல் உள்ள சதித் திட்டங்கள் நகர்வுகள் குறித்தெல்லாம் மிகவும் அவதானமாகமுஸ்லிம் உலகம் பயணிக்க வேண்டியுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பித்னத் அலகுபரா அதிகாரத்திற்கான போட்டா போட்டி ஷியா சுன்னி போராட்டங்கள், மேலாதிக்க சக்திகளின் இராணுவ பொருளாதார நலன்கள் இவற்றிற்கான போராட்டங்கள் முஸ்லிம் உலகின் விடிவிற்கான போராட்டம் அல்லது அவற்றிற்கு இடையில் தோன்றும் நம்பிக்கை கீற்றுகள் முஸ்லிம் உம்மத்திற்கு விடிவைத் தந்துவிடும் என முழு முஸ்லிம் உலகையும் நம்பச் செய்வதற்கான முயற்சிகள் தவறானவை.
இலங்கை, இந்தியா வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை குறிப்பாக இளைஞர்கள் சொந்த மண்ணில்மேற்கொள்ளப்படுகின்ற சமூக இஸ்லாமியப் பணிகள், இனங்களுக்கிடயிலான சமாதான சகவாழ்வு முன்னெடுப்புக்கள் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் குறித்த அரசியல் சிவில் சமூக நடவடிக்கைகள் என்பவற்றில் ஈடுபாடுகாட்டுவதே அவர்களின் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பணியாகும்.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எழுச்சிகள் விடுதலைக்கான விடிவுக்கான போராட்டங்களில் ஒரு சர்வதேச உம்மத் என்ற வகையில் நாம் காட்டும் ஆர்வமும் அக்கறையும் எமது தேசிய வாழ்வு குறித்த அனாவசியமான சந்தேகங்களை ஏற்படுத்தும் விதத்தில் அமைவது எந்த ஒரு தரப்பிற்கும் நன்மைகளைகொண்டுவரப்போவதில்லை மாறாக இந்த நாட்டு முஸ்லிம்களை குறி வைத்துள்ள தீய சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உண்மை விசுவாசிகளையும் உண்மை போராளிகளையும் பாதுகாப்பானாக. இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளின் நாசகார சதிவலைகளில் இருந்து அவன் ஒருவனையே நம்பி விடுதலைக்காக போராடும் போராளிகளை சரியான திசையில் வழி நடாத்துவானாக.
alhamdulillah this is a very good article
ReplyDeletemay Allah gives us sincerity
may Allah gives victory to all sincere mujaheddin
may Allah gives Islamic khilafat very soon
aameen!!!
very good and useful comments,masha allah ,
ReplyDelete