ஈராக்கிலிருந்து சவூதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்
சவுதி அரேபியாவின்; வடகிழக்கு அரார் எல்லைப் பகுதிக்கு ஈராக்கில் இருந்து பல எறிகணைகள் விழுந்துள்ளன.
"வடகிழக்கு எல்லைப் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்கு அருகில் மூன்று எறிகணை தாக்குதல்கள் இடபெற்;றுள்ளன. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை" என்று சவு+தி எல்லைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த எறிகணை தாக்குதல் குறித்து சவு+தி அரேபியா உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈராக்கில் ஐசிஸ் எனப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையினர் நாட்டின் கணிசமான நிலப்பகுதியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு யுத்த பதற்றம் நீடித்து வருகிறது. ஐசிஸ் போராளிகளுக்கு சவு+தி உதவுவதாக ஈராக் பிரதமர்; நூரி அல் மலிக்கி கடந்த மாதம் குற்றம் சுமத்தியிருந்தார்.
கடந்த மூன்று தினங்களுக்குள் சவு+தி எல்லையில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக சவு+தியின் தெற்கு எல்லையான அல் 'வ்ரூரா மீது யெமனை மையமாகக் கொண்ட அல் கொய்தா ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் பாரிய முன்னேற்றம் கண்டதை அடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சவு+தி மன்னர் அப்துல்லாஹ் கடந்த வாரம் உத்தரவிட்டி ருந்தார்.
அத்துடன் ஈராக் எல் லைக்கு 30,000 துருப்புகளையும் சவு+தி அனுப்பியது.
இஸ்லாமிய கிளாபத் அல்லது பேரரசை அறிவித்த ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் தமது பேரர சுக்குள் சவு+தியையும் உள்ளடக் கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment