Header Ads



மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து, கோத்தா சிங்கள அமைப்புக்களுடன் பேச்சு

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ சிங்கள அமைப்புக்களை சந்தித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுபலசேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்களின் பௌத்த தேரர்கள், கோதபாயவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மூன்று பீடங்களினது பௌத்த மாநாயக்கர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முஸ்லிம் மதத் தலைவர்களுடனும் கோதபாய சந்திப்பு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மாபெரும் துவேசி.. இவை எல்லாம் ஒரு நாடகம். வெளியில் இருந்து வரும் அழுத்தத்தை தணிப்பதற்காக ஆடும் ஒரு நாடகமாகும். நிட்சயமாக முஸ்லிம் மக்கள் உங்களது ஆட்டத்துக்கு ஒரு முற்று புள்ளி வைப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.