Header Ads



ஈராக்கிலுள்ள இலங்கையருக்கு ஆபத்து இல்லை - வெளிவிவகார அமைச்சு

ஈராக்கிலுள்ள சுமார் 1000 இலங்கையருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லையெனவும் பக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இன்னமும் செயற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பக்தாத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்தின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும், ஈராக்கிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக தூதரகம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜே.சதீக் தெரிவித்துள்ளார். வடக்கு குர்திஸ்தான் பிராத்தியத்திலேயே கூடுதலான இலங்கையர்கள் உள்ளனர். 

இப்பிராந்தியம் ஆயுதக் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஈராக் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது இவர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். 

ஈராக் சர்வதேச விமான நிலையக் கட்டுமானப் பணிகளில் சுமார் 4000 இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிரவும் 200ற்கும் அதிகமான இலங்கையர்கள் வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை அவசரமாக வெளியேற்றுவதற்கான தேவை ஏற்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவ்வாறு அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களை வெளியேற்று வதற்கான திட்டங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.