Header Ads



பிரான்ஸ் நாட்டில் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை கொன்ற மாணவியின் தாய்

பிரான்ஸ் நாட்டில் தொடக்கப்பள்ளியில் வகுப்பறையில் இருந்த ஆசிரியை கத்தியால் குத்திக்கொன்ற மாணவியின் தயாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு நகரான அல்பி என்ற நகரத்தில் ஆரம்பபள்ளி ஒன்றில்  பெபினே தெர்ரால்-கால்ம்ஸ்(வயது 34)என்பவர் ஆசிரியையாக  வேலைபார்த்து வந்தார். இந்த பள்ளியில் 3 வயது முதல் 11 வயது வரை உள்ள 300 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.  சம்பவத்தன்று இரண்டு மாணவிகளுடன் ஒரு பெண் பள்ளிக்கு வந்தார்.

 அவர் தனது மகள் படிக்கும் வகுப்பறைக்கு சென்றார். அப்போது ஆசிரியர், வகுப்பறையில் அவர் பாடம் நடத்த ஆரம்பித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை பெபினேவின் வயிற்றில் குத்தினார்.

இதனால் பலத்த காயம் அடைந்த அந்த ஆசிரியை பெபினே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கத்தியால் குத்திய பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் அதிபர் ஹொலாண்டே நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மந்திரிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.