Header Ads



மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உரிமை மகிந்தவுக்கு இல்லை - முன்னாள் பிரதம நீதியரசர்


இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மூன்றாவது முறையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்று தான் கருதவில்லை என்பதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்க எண்ணியுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையில் உருவாக்கப்பட்ட 78 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமற்றது என்று ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இன்றைய ஜனாதிபதி, மூன்றாவது முறையாகவும் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் கூறியுள்ளார். 

அனைத்துக்கும் மேலாக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணை என்பது முக்கியமானது.  ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் நபருக்கு எவ்வித தயக்கமும் இன்றி ஆதரவு வழங்கப்படும்.

எனினும் பொது வேட்பாளர் யார் என்பதை தான் அறியவில்லை எனவும், எந்த வகையிலும் தான் பொது வேட்பாளர் அல்ல எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.