Header Ads



அதுதான் உண்மை..!


(நாகூர் ழரீஃப்)

நீ எதுவும் பேசாதே!
எது பேசினாலும்
அது பிழை!
அவற்றை விசாரிப்போம்.
பல மாடிகள் உன்னை
ஏற்றி – மட்டுமல்ல
மாற்றி மாற்றி
விசாரிப்போம்.

ஏமாலிகளான
உலகநாடுகளின்
நடு நிலை,
சம நிலை 
என்பதெல்லாம்
எம்மிடமில்லை,

புலமை பெற்ற எமது
புலனாய்வுத் துறை
உலகில் எம்மிடமுள்ளது
போன்றதல்ல
இப்பொழுது
புரிகிறதா?

சம்பந்தன் ஐயாவும்
விதிவிலக்கல்ல,
நீதி அமைச்சரும்
எமது பார்வையில்
சந்தேகத்துக்குரியவரே!
அஸாதும் முஜீபும் -
எவர் எது பேசினாலும்
அவரை விரட்டி விரட்டி
விசாரிப்போம்!

சமயலறை,
படுக்கையறை,
மேல் மாடி,
மொட்டை மாடி
எங்கும் வருவோம்,
எப்பொழுதும் வருவோம்.

தொண்டுப் பணி
செய்தாலும்,
சமூகப் பணி செய்தாலும்
அளுத்கமையில்
செய்தாலும்,
பரணகமையில் ஆனாலும்
மறக்காமல் -
விசாரிப்போம்!

கட்டளை இடுவதும்,
பின்னர் அதனை
ஆலோசனை
என்று மாற்றி
அர்த்தம் கொடுப்பதும்,
உலக அரங்கில் -
மூவினமும் ஓரினம்,
சிறுபான்மை என்பது
எமது அகராதியில்
இடம்பிடிக்கத்
தவறிய சொற்பதம்
என்பதெல்லாம்
எமக்கு அவ்வப்போது
தோன்றும்!!
அது கைவந்த கலை!

எம்மவர் நீதிமன்றையும்
ஏசி அவமதிப்பார்,
பாராளுமன்றையும்
பீடிகைப் படுத்துவார்!
புலனாய்வுத் துறையின்
புலமையையும்
பிழை காண்பார்,
ஆனால் அது சரியே –
அதுதான் உண்மை!!

2 comments:

Powered by Blogger.