முஸ்லிம் அமைச்சர்களின் அறிக்கை
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் முஸ்லிம் தீவிரவதம் முஸ்லிம் கடும்போக்குவாதம் நிலவி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து அமைச்சர்கள் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். பௌசீ, ரிசாட் பதியூதீன், பசீர் சேகுதாவூத் மற்றும் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சில தீய சக்திகள் இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடத்த வேண்டுமே தவிர ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் கடும்போக்கவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கே இடமளிக்காது என தெரிவித்துள்ளனர்.
தேசிய ஐக்கியத்தை மேம்படுத்தும் முனைப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முஸ்லிம் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
ReplyDeleteஎங்களது முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இலங்கை முஸ்லிம் தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டுக்கு எதிராக அறிக்கை விட்டதற்காக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
A.அப்துல் ஜலீல் - Chavalakadai
Yes of course! No doubt, the co-report is a wonderful think. But it will be definitely sent to the waste paper dustbin of the Hon. President Secretariat!
ReplyDelete