வெலிப்பென்ன வியாபாரிகளுக்கு புலம்பெயர் ஸ்பெயின் முஸ்லிம்கள் நிதியுதவி
கடந்த ஜுன் 15ஆம் திகதி இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட வெலிப்பென்ன பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களினால் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெலிப்பென்ன பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகள்ää குறித்த நிதியுதவியினை பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரிகளுக்கு வழங்கினர்.
ஊடகவியலாளர் வெலிப்பென்ன அத்தாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் பொதுச் செயலாளர் அஸ்கர் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட வெலிப்பென்ன பிரதேசத்திலுள்ள ஐந்து முஸ்லிம் வியாபாரிகளுக்கு ஸ்பெயினில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களினால் வழங்கப்பட்ட நிதி கையளிக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினாலும் குறித்த முஸ்லிம் வியாபாரிகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment