பிற மதங்களை விமர்சித்து கருத்துக்களைக் கூறாதீர்கள் - மஹிந்த ராஜபக்ஸ உபதேசம்
அடிப்படைவாதிகளால் அவர்களின் மதங்களுக்கு கூட பயன்கிடைக்காது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிற மதங்களை விமர்சித்து அவற்றிற்கு எதிராக கருத்துக்களைக் கூறுவது, மத கோட்பாடு அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.
எந்த மதத்தை சார்ந்தவர்களானாலும், தாய் நாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment