Header Ads



பொரளை வெளிக்கடை சிறைச்சாலையில் இப்தார் (படங்கள் இணைப்பு)


(அஸ்ரப் ஏ சமத்)

பொரளை வெளிக்கடை சிரையில்  3550 கைதிகளுள் 1000க்கும் மேற்பட்ட முஸ்லீம் கைதிகள் உள்ளனர். பெண்சிறையில் 30க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்களும் உள்ளனர். அதில் போதைப்பொருள் சம்பந்தமாக 33 பாக்கிஸ்த்தாணியர்கள் ஆயுட் கால கைதிகளாக உள்ளனர். மேலும் ஈராணியர் ஆப்கணிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள 3பேரும் . இந்தச் சிறையில் உள்ளனர். 

இன்று சிரைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிரி கஜதீர, அவர்களின் ஏற்பாட்டில் வெளிக்கடை சிறைக்கூடங்களுக்குள் உள்ள  சகல முஸ்லீம் கைதிகளும் கலந்து கொண்ட ; நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று சிறைக்கூடத்தில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவசாலில் நடைபெற்றது.  பிரதிமையச்சர் சந்திரசிரி முத்துக்குமார சிறைச்சாலைகள் ஆணையாளர் சத்திரத்தின அமைச்சின் மேலதிகச் செயலாளர் அஷ;Nஷக் அமீர் மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் கஜதீர இந்த நாட்டில் உள்ள சகல சமுகங்களும் மிகவும் தத்தமது மதங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு சகல சிறைக்கூடங்களும் சிறந்த முறையில் வழிநடத்தப்படுகின்றது. இங்குள்ள முஸ்லீம்கள் தமது நோன்பு காலத்தில் சகல கடமைகளை மேற்கொண்டு தாம் ஆண்மீகத்துறையில் ஈடுபடுவதற்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளோம். அதற்காகவே நோன்பு காலத்தில் நள்ளிரவில் தமது உணவை சமைத்து நோன்பு பிடித்து அத்துடன் தமது மதக் ;கடமைகளை செய்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனக் கூறினார். அவரகளது மொழிகளில் மத நூல்கள் கூட அண்மையில் எனது அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களுக்கு சிறந்த உணவுகள் பரிமாறப்படுவதாகவும் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.