இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்துநிறுத்துங்கள் - பான் கீ மூன்
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் தொடராமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக்கிடம், ஐபிஎஸ் செய்தி நிறுவனம், கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு அளித்த பதிலிலேயே, ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள கோரிக்கை குறித்து, அவர் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவின் தென் பகுதியில் முஸ்லிம் சமூகத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலர் கவலையடைந்துள்ளார்.
மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தவும், எதிர்காலத்தில் அத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்கும் துவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்ட, ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட கடந்த மார்ச் மாத தீர்மானத்தையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
நிலைமைகள் மேலும் மோசமடையாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடத்துமாறும், எல்லா இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், ஐ.நா பொதுச்செயலர் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment