Header Ads



விஜித தேரர் நீதிவானால் எச்சரிக்கப்பட்டு விடுதலை


வட்டரக்க விஜித தேரர், பௌத்த துறவி என்ற பொறுப்புடன் செயற்படுமாறு பாணந்துறை பிரதான நீதிவான் ருச்சிர வெலிவத்தை எச்சரித்துள்ளார். பொலிஸாரிடம் உண்மைக்கு மாறான முறைப்பாட்டை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விஜித தேரர், மீண்டும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு நீதிவான்  ஒத்திவைத்தார். 

No comments

Powered by Blogger.