Header Ads



'ஷரியத் நீதிமன்றம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல' இந்திய உச்ச நீதிமன்றம்

'ஷரியத் நீதிமன்றம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல; அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடையாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நீதித்துறைக்கு இணையான, ஒரு அமைப்பு முறையை, முஸ்லிம்களின் ஷரியத் கோர்ட்டுகள் பின்பற்றுகின்றன. அதனால், ஷரியத் கோர்ட்டுகள் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என, கேள்வி எழுப்பி, விஷ்வா லோச்சன் மேதம் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், 'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.

விசாரணைஇந்த பொதுநல மனு, நீதிபதிகள் சி.கே.பிரசாத் தலைமையிலான, உச்ச நீதிமன்ற, 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, முஸ்லிம்களின் தனிச்சட்டமான, ஷரியத் சட்ட விதிகளை பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டுள்ள, அகில இந்திய தனிச்சட்ட வாரியம் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் (பாத்வா) மக்களை கட்டுப்படுத்தாது. அது, முஸ்லிம் மத தலைவர்களின் கருத்துக்களே. அந்த கருத்துக்களை அமல்படுத்தும் அதிகாரம் எதுவும், அவருக்கு கிடையாது. ஒரு நபரின் விருப்பத்திற்கு மாறாக, தன் உத்தரவை, முஸ்லிம் மத தலைவர் அமல்படுத்த விரும்பினால், அதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.இவ்வாறு, அந்த வழக்கறிஞர் கூறினார்.

ஏற்றுக்கொள்ள முடியாது - இந்நிலையில், இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தங்கள் முன் ஆஜராகாத அல்லது இல்லாத ஒரு நபருக்கு எதிராக, ஷரியத் நீதிமன்றங்கள், 'பத்வா' என்ற உத்தரவுகள் பிறப்பிப்பது சரியானதல்ல; அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷரியத் நீதிமன்றங்கள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவற்றுக்கு சட்ட ரீதியான அந்தஸ்து எதுவும் கிடையாது.இந்த ஷரியத் நீதிமன்றங்கள், சில நேரங்களில் பிறப்பிக்கும் உத்தரவுகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், அப்பாவிகளை தண்டிப்பதாகவும் உள்ளது. அது, சரியல்ல. இஸ்லாம் உட்பட, எந்த மதமும், அப்பாவி நபர்களை தண்டிக்க அனுமதி வழங்குவதில்லை.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்லீம் அமைப்புகள், முஸ்லீம் சட்டப்படி செயல்பட அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளன. நாங்கள் சட்டத்திற்கு இணையாக செயல்படவில்லை எனவும், ஷரியத் சட்டப்படி, இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளை தீர்ப்பதே எங்கள் நோக்கம் என கூறியுள்ளன.

1 comment:

  1. சட்டம் என்றாலே தீர்ப்பு என்றாலே அது இஸ்லாமிய சரியா தீர்பும் சட்டமும்தான் ஒரே நிலைப்பாட்டுடன் அன்றிருந்து இன்றுவரை பின்பற்றப்படுகின்றது. ஒரே சட்டம் ஒரே தீர்பு நாளுக்கு நாள் ஆளுக்கு ஆள் அது மாறாது. மற்றும் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய சட்டத்தை எந்த மகானாக இருந்தாலும் மாற்றவும் முடியாது அதுபற்றி பேச யாருக்கும் உரிமையும் கிடையாது யார்வேண்டுமானாலும் அதற்கு எதிராக கூட்டம் கூடி கோசமிட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்து மாற்றலாம் என்று நினைத்தால் அது சிறுபிள்ளைத்தனமாகவே கருதப்படும்.

    இஸ்லாமிய சட்டங்களால் முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றாகள் என்பதன் கருத்து பைத்தியகாரர்களின் பேச்சுக்கு சமன். இஸ்லாமிய சட்டத்தை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல எல்லோராலும் இன்று வரவேற்கப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.