எவ்வளவு நன்மை இருந்தாலும், சில சறுக்கல்கள் இல்லாமலா இருக்கும்.?
இன்றயை நவீன உலகில் அனைவருடனும் அங்கமாகி விட்டது சமூக வலைத்தளம் பேஸ்புக், இந்த அளவிற்கு தகவல் பரிமாற்றம் பேஸ்புக் மூலமே நடந்து வருவது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. நண்பர்கள் அனைவரும் பேஸ்புக் பார்த்து விட்டீர்களா என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இன்றுகூட இந்திய நிதி மற்றும் வெளியுறவு துறை, வர்த்தகம் உள்ளிட்ட அமைச்சகம் பேஸ்புக்கில் இணைந்துள்ளன.
எவ்வளவு நன்மை இருந்தாலும், சில சறுக்கல்கள் இல்லாமலா இருக்கும். பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பாக சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்களில் 2.18 சதவீதத்தினரரை விவாகரத்து பெற ஊக்குவிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. பேஸ் புக் பயன்படுத்துவோர்களில் 32 சவீதம்பேர் நாம் ஏன் பிடிக்காத நபருடன் வாழ வேண்டும் என்ற அளவிற்கு சிந்தனை தூண்டப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. இது போல் டுவீட்டரும் சிலரது காதல் வாழ்க்கையை நொறுக்குவதற்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது என்று மிசௌரி பல்கலை பேராசிரியர் நடத்திய ஆய்வில் கூறியுள்ளார்.
மற்றொறு ஆய்வில் இளைஞர்கள், இளைஞிகளை அதிகம் நெருக்கமுற செய்கிறது என்றும், சில நேரங்களில் மோசமான உறவுகளுக்கும் பயன்படுகிறது. தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்க தகவல்கள் இதில் வெளியாகும் போது பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும் விதமாகவும் பேஸ்புக் உருவாகியுள்ளது.
Post a Comment