குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள ஞானசார முயற்சி - ரவூப் ஹக்கீம்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பேருவளை, அலுத்கம வன்முறைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸே பொறுப்பு என்ற ஞானசார தேரரின் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுபல சேனா இயக்கமே அண்மைய வன்முறைகளின் பின்னணியில் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்களில் கட்சியோ கட்சியின் உறுப்பினர்களோ பங்கேற்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவரினதும் கவனத்தை திசை திருப்பி குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் ஞானசார தேரர் இவ்வாறு தம்மீது குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த வன்முறைச் சம்பவங்களும் மிகவும் நன்றாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா இயக்கமே இந்தக் குற்றச் செயலை மேற்கொண்டிருந்தது என்பது வெட்ட வெளிச்சமானது என அவர் தெரிவித்துள்ளார்.
so as a Minister of Justice, can you do anything?
ReplyDelete