ராஜித சேனாரட்னவிற்கு விசர் பிடித்துள்ளது - ஞானசார
தொலைபேசி வழியான மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இடைக்கிடை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
இதனை நான் சொற்பளவேனும் கவனத்தில் கொள்வதில்லை. அஞ்சியதுமில்லை. இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியமன்று என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு விசர் பிடித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
புலிகளுடன் தொடர்புகளைப் பேணுவதாக ராஜித தொடர்ச்சியாக சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க சட்டத்தின் உதவி நாடப்படும்.
இந்த சந்திப்பிற்கு ரவி கருணாநாயக்க எதற்காக பணம் வழங்க வேண்டும். ராஜிதவின் இந்தக் குற்றச்சாட்டு முற்று முழுதான ஓர் பொய்யாகும்.
நோர்வேக்கு விஜயம் செய்தமை உண்மை, எரிக் சொல்ஹெய்முடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எனினும் புலிகளுடன் சந்திப்பு நடத்தவில்லை.
ராஜித போன்ற அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்துகின்றனர். காலம் முழுவதும் இவர்கள் தங்கள் நடிப்புத் திறமையினால் அரசியல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் ஞானசார தேரர் புலி ஆதரவாளர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜித சேனாரட்ன சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
புலம்பெயர் தமிழர்களில் தேசப்பற்றுள்ள தரப்பிரை சந்தித்து தான் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் தான் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் நோர்வே சென்றது உண்மை. இது அனைவரும் அறிந்த விடயம். எரிக் சொல்ஹெய்முடன் புகைப்படம் எடுத்தோம்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடனும் புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வோம். இதற்கு நாங்கள் எவரிடம் அனுமதிப் பெறவேண்டிய அவசியமில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
yes you will get snaps with kingkong
ReplyDelete