இலங்கை கோழி இறைச்சி, முட்டைக்கான தடையை ஐக்கிய அரபு இராச்சியம் நீக்கியது
இலங்கையில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டை வகைகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் தோற்று நோய் காரணமாக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்வதை சில வருடங்களாக தடை செய்து இருந்தது . தற்போது இலங்கையில் பறவைக் காய்ச்சல் நோய் தோற்று கிடையாது என்பதனால் இலங்கை அரசாங்கம் துபாயில் உள்ள இலங்கை ப் பிரதி தூதுவர் எம் எம் அப்துல் றஹீம் மூலமாக ஆவணங்களை சமர்ப்பித்து தெளிவுபடுத்தியது.
இதன்படி பிரதித் தூதுவர் அப்துல் றஹீம் துபாயில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீர் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் சாபி முகமட் அல் சாரா மற்றும் அமைச்சின் அதிகாரிகளையும் அண்மையில் சந்தித்து இலங்கை தொடர்பான விளக்கமொன்றை ஆவணங்களுடன் சமர்ப்பித்து தெளிவுபடுத்தி இருந்தார்.
இலங்கை கோழி இறைச்சி , முட்டை வகைகளில் பறவைக்காய்ச்சல் தோற்று நோய் இல்லை என்று இதன்போது உறுதி செய்து விளக்க வுரையும் அப்துல் றஹீமினால் அளிக்கப்பட்டது . இலங்கையில் கோழிப் பண்ணை தொழிலில் முன்னணி நிறுவனமான Bairaha நிறுவனத்தின் உரிமையாளரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறுப்பிடத்தக்கது.
இலங்கை பிரதித் தூதுவர் அப்துல் றஹீமின் விளக்கங்களையும் , ஆவணங்களையும் பரிசீலித்த ஐக்கிய இராச்சிய அமைச்சின் அதிகாரிகள் இலங்கைக்கான தடையை நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளி விவகார அமைச்சின் மூலமாக உத்தியோக பூர்வமாக அறிவித்து உள்ளனர் .
துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவர் அப்துல் றஹீமின் முயற்ச்சியினால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையினை இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்கள் பாராட்டுவதுடன் , தடை நீக்கபட்டுள்ள நிலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது கோழிப் பண்ணை உற்பத்தி கிராமங்கள் தோறும் வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில் இந்த தடை நீக்களானது இலங்கையில் ஏற்றுமதி துறையில் கோழி இறைச்சி , முட்டை மற்றும் பதனிடப்பட்ட இறைச்சிவகைகளில் ஏற்றுமதியை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது .
Post a Comment