Header Ads



சீனாவில் ரமழான் நோன்புக்கு தடை

சீனாவில் ரம்சான் நோன்பு நோற்கத் தடைபெய்ஜிங் : சீனாவில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதைச் சீன அரசு தடை செய்துள்ளது.

சீனாவில் முஸ்லிம்கள் வசிக்கும் வடமேற்கு பிராந்திய ஸிங்ஜியாங் பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளின் இணைய தளங்கள் மூலமும் அரசு முகாமைகள் மூலமும் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களும் மாணவர்களும் ரம்சான் மாத சமயக் கடமைகளில் பங்கெடுக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரம்சான் நோன்பு நோற்பதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் அரசு ஊழியர்கள் நோன்பைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னதாக ஸிங்ஜியாங் பிரதேச அரசு கேட்டுக்கொண்டது குறிப்பிடத் தக்கது.

ரம்சான் மாத நோன்பு நோற்பதற்கு அனுமதி இல்லை என ஒவ்வொருவரையும் நினைவூட்டுகிறோம். சீனக்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் , இளைஞர்கள் ஆகியோர் ரம்சான் மாதச் செயல்பாடுகளில் கலந்து கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது என அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சியான Bozhou தன் இணைய தளத்தில் குறிப்பிடுள்ளது.

.தொழுகைக்காகவும் நோன்புகால வழிபாட்டுக்காகவும் முஸ்லிம்கள் ஒன்று கூடுவதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸிங் ஜியாங் பிரதேச அரசும் விரும்பவில்லை. உய்குர் முஸ்லிம்கள் மீதான இது போன்ற கட்டுப்பாடுகளும் மதச்செயல்பாடுகளில் தடையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் எனவும் உய்குர் முஸ்லிம்களின் மத வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்தவும் அரசியல் அடக்கு முறையை நிறுத்திக்கொள்ளவும் சீன அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதாக நாடு துறந்து வாழும் உலக உய்குர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தில்ஷத் ரசீத் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். inn

1 comment:

Powered by Blogger.