'இலங்கையில் சிங்கள, முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்கள் இயங்குகின்றன'
இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்கள் இயங்கி வருவதாக ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறான கடும்போக்குடைய அமைப்புக்களை இல்லாமல் செய்ய அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். இன சமூகங்கள் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த தென் ஆபிரிக்க துணை ஜனாதிபதி சிரில் ரமாபோசாவிற்கு இந்த நிலைமைகளை நேரில் பார்வையிட சந்தர்ப்பம் கிட்டியதாகத் தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை ஆட்சி கவிழ்ப்பதற்கான ஓர் உத்தியாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏனைய வெளிநாட்டு சக்திகளும் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் சரியான பாதையிலேயே பயணம் செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து திருப்தி அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment