Header Ads



வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம்களது பெயர் நீக்கம்

மன்னார் மறிச்சிக்கட்டி, வவுனியா - சாளம்பைக்குளம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கிராமங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களினது வாக்கு பதிவுகள் வாக்கு பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு உரிய நியா யத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் உறுதியளித்துள்ளார். 

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீனை  தேர்தல்கள் ஆணையாளர் சந்தித்து உரையாடிய போதே மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளார். 

2014ம் ஆண்டிற்கான வாக்காளர்களை பதிவு செய்யும் பணிகளின் போதே இப்பெயர்கள் நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. 

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலேயே அமைச்சர் ரிஷாட் தேர்தல் ஆணையாளரை சந்தித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பிரதி தேர்தல் ஆணையாளர் மொகமட் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு. புத்தளம் ஆகிய மாவட்டங்களின் உதவி ஆணையாளர்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். 

யுத்தத்தின் நிமித்தம் தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் வாக்கு பதிவுகள் உள்வாங்கப்படாமல் போயிருந்தால் அவற்றை அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள் பதிவு செய்யப்படுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் அடுத்த மாதம் ஆரம்ப பகுதியில் மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக செல்லவுள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார். 

இது தவிர புத்தளம் அகதி முகாமில் இருக்கும் ஒருவர் அவரது வாக்கை மேலதிக இணைப்புப் பட்டியலில் பதிவு செய்து அவர் புத்தளத்தில் இருக்கத்தக்கதாக அவரது பெயர் அவரது சொந்த இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இணைக்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகின்றது. 

தமது வாக்கு கடந்த ஜூன் மாத பதிவின் போது உள்வாங்கப்படவில்லை என எவரும் அச்சமடைய தேவையில்லை. எதிர்வரும் நவம்பர் மாதம் விசேட இணைப்புபட்டியலில் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. 

எனவே இன்றிலிருந்தே தமக்கு அருகில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தத்தமது பெயர்களை பதிவு செய்யலாம். 

1 comment:

  1. அடடா!

    "பட்டுவேட்டி பற்றிய கனாவிலிருந்தால் நீங்கள் கட்டியுள்ள கோவணமும் களவாடப்படும்" என்பது இதைத்தானோ...?

    ReplyDelete

Powered by Blogger.