இன முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன - சஜித் பிரேமதாச
இன முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக நாட்டில் மீண்டும் இன முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
கடும்போக்குடைய சொற்ப அளவிலானவர்களின் நடவடிக்கைகளினால் பெரும்பான்மையான மக்கள் துயரங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
அன்று பிரேமதாச ஜனாதிபதி, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அனைத்து இனங்களையும் மதங்களையும் ஜனாதிபதி பிரேமதாச ஒரே விதமாக நடத்தினார்.
இலவசக் கல்வியை இல்லாதொழித்து வரும் தற்காலத்தில் ஜனாதிபதி பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை மக்கள் நன்றியுடன் பாராட்டி வருகின்றனர்.
பாடசாலை மாணவ மாணவியருக்கு இலவசமாக புத்தகங்கள், சீருடைகள், பகலுணவு என பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தார்.
வடக்கு கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என சஜித் பிரேமதாச சிங்களப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
Post a Comment