முஸ்லிம்களுக்கு மற்றுமோர் எச்சரிக்கை..!
(ஒற்றன்)
நாட்டில் தலைவர் இல்லாத ஒரு நேரத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும் என்ற தகவல் படி அளுத்கம பேருவளைத் தாக்குதல்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு பௌத்த தேரர் மீது கை வைத்து விட்டார்கள் என்ற அபாண்டம் காரணமாக இருந்தது. பொலிஸ், படைத்தரப்பு, பாராளுமன்றம், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி என்ற அனைத்துத் தரப்பினரும் இந்தத் தேரர் மீதான தாக்குதல்தான் இதன் ஆரம்பம் என்று இன்று வரை தகவல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
தேரர் மீது கை வைத்தற்கான ஆதாரங்கலோ வைத்திய சான்றிதழ்கலோ இல்லாத போதும் தேரர் தாக்கப்பட்டார் என்று கூட்டம் போட்டு அவர்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது முஸ்லிம்கள் கல்லெறிந்ததால்தான் வன்முறை வெடித்தது என்று ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக வெறும் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் புணைந்து அதனைக் காரணம் சொல்லி முஸ்லிம்கள் மீது வன்முறை ஏற்பாடுகள் நடந்தது.
இந்தக் கதைகள் அனைத்தும் வெரும் கற்பனைகள் என்று தெரிந்தும் பொறுப்பான ஆட்சியாளர்களும் இந்தக் காரணங்கலே வன்முறைக்கு அடிப்படை, முஸ்லிம்கள் தான் பிரச்சினையை ஆரம்பிக்கின்றார்கள் என்று தொடர்ந்தும் பேசி வருகின்றார்கள், என்பது வேதனையான விடயம். இந்தப் போலிக் கதைகள் பற்றிய உண்மைத்தன்மையை இன்னும் முஸ்லிம்கள் தரப்பில் நிரூபிக்க முடியாமல் இருக்கின்றது. அதிகாரம் படைத்தவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதனால் இந்த நிலை.
இந்த விவகாரங்கள் ஒரு புறம் இருக்க தற்போது பொது பல சேனாத் செயலாளர் ஞானசாரத் தேரர் நாட்டிலிருந்து சில காலம் வெளியில் செல்ல முனைவதாகத் தெரிகின்றது. அமெரிக்கா போக முடியாத நிலையில் அவர் தற்போது இங்கிலாந்து பயணிக்க முனைவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
அவர் வெளி நாட்டில் இருப்பது பற்றியோ உள்நாட்டில் இருப்பது பற்றியோ எமக்குக் கவலையில்லை. அவர் எங்கும் போகலாம் எங்கும் வரலாம். பிரச்சனை அதுவல்ல இவரது வெளி நாட்டு விஜயத்தில் எமக்கு இப்படி ஒரு சந்தேகம் தோன்றுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் மூலகார்த்த இவர் என்று கருதப்படுகின்றது? எனவே இவர் வெளி நாட்டில் தங்கி இருக்கின்ற நேரத்தில் - காலத்தில் இலங்கையில் மற்றுமொரு வன்முறையை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழத்து அழிவுகளை உண்டு பண்ணிவிட்டு நான் நாட்டில் இல்லாத போதுதானே இதுவெல்லாம் நடந்திருக்கின்றது. எனவே எல்லா விடயங்களுக்கும் என் மீது கை நீட்டுவது நியாயமா என்ற நிலையைத் தோற்றுவிக்க இவர் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டு கப்பலேறுகின்றாறோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
தன்மீது சார்வதேசம் குற்றம் சுமத்தி வருகின்றபோது நானில்லாத நேரத்திலும் நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றார்கள் என்ற நிலையை ஏற்படுத்த இவர் பயணம் போகின்றாறோ என்று எண்ணத் தோன்றுகின்றது எனவே இவர் கப்பலேருவதானால் முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி இருக்கும்.
இவர் பயணிக்கும் விமானம் வெடித்துச்சிதறாலம், இவர் செல்லும் விமானத்தில், பயணிக்காமல் இருப்பது நல்லது..!
ReplyDelete