Header Ads



தனது நாட்டு முஸ்லிம்களையே உளவுபார்த்த அமெரிக்கா

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குறித்த உளவு நடவடிக்கையின் கீழ் அந்நாட்டின் ஐந்து முன்னணி முஸ்லிம்கள் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தை இணையதள சஞ்சிகை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் தேசிய பாது காப்பு நிறுவனம் (என்.எஸ்.ஏ.) மற்றும் எப்.பி.ஐ. ஆகியன ஒரு வழக்கறிஞர், குடியரசு கட்சி அரசியல்வாதி ஒருவர், பல்க லைக்கழக பேராசிரியர் ஒருவர் மற்றும் இரு சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருப்பதாக 'இன்டர்செப்ட்" சஞ்சிகை கடந்த புதன் கிழமை செய்தி வெளியிட் டுள்ளது. 

எனினும் இந்த முஸ்லிம்கள் எந்த தீவிரவாத சந்தேகத்திற்கு உட்பட்டவர்களோ அல்லது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களோ அல்ல என்று இன்டர் செப்ட் குறிப்பிட்டுள்ளது. இன்டர் செப்ட் சஞ்சிகை, அமெரிக்க உளவு இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடனின் பல ஆவணங்களையும் முன்னர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. 

எனினும் இந்த குற்றச்சாட் டுக்கு உடன் பதிலளித்திருக்கும் என்.எஸ்.ஏ. உளவு நிறுவனம் மற்றும் நீதித் திணைக்களம், குறித்த காரணத்திற்காக மாத்திரம் அமெரிக்க பிரiஜகளின் இணைதளங்கள் கையாளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.