'இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் பகிரங்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்தும் பிரேணை'
(எம்.எம்.ஏ.ஸமட்)
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடிய விதத்தில் இடம்பெறும் பகிரங்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது தடை செய்யக் கூடிய இலங்கையிலுள்ள சட்டங்கைளை அமுல்படுத்துவதற்காக சட்டமா அதிபரை கிழக்கு மாகாண சபையினூடாகக் கோரும் தனிநபர் பிரேரணையொன்றை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
சமீப காலங்களில் ஒரு இனத்திற்கு எதிராக இன்னுமொரு இனத்தை வன்முறையைத் தூண்டிவிடும் விதத்திலும் ஆவேசமான, வெறுப்பை உண்டாக்கும் கருத்துக்களைத் தெரிவித்தும் இன முரண்பாடுகளையும் சகவாழ்வையும் சீர்குழைக்கும் விதத்திலும் பேசப்படும் பகிரங்க மேடைப் பேச்சுக்களும் ஊடகக் கருத்துக்களும்; அதிகரித்துவிட்டன.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கடும்போக்காளர்களின் இத்தகைய பேச்சுக்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் மனங்களை வெகுவாகப் பாதித்து வருகிறது.
குறிப்பாக, பொதுபலசேனா போன்ற கடும்போக்காளாகள்; இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கின்ற கருத்துக்கள் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கக் கூடியதாகவும் சகவாழ்வை கேள்விக்குறியாக்கும் விதத்திலும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.
இந்தவகையில,; இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடிய விதத்தில் இடம்பெறும் பகிரங்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது தடை செய்யும் இலங்கைச் சட்டத்தில், முக்கியமாக 2007ஆம் ஆண்டின் 56வது இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டு ஒழுக்கச் சட்டத்தின் பிரிவு 3இன் பிரகாரம் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்கள் பகிரங்கமாகப் புரியப்படக் கூடிய சந்தர்ப்பத்தில் எதுவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது சட்டத்தின் கரங்கள் கட்டிவைக்கப்பட்டது போல் அல்லது சட்டத்தின் ஆட்சி இடம்பெறவில்லையென்பதைத் தோற்றுவிப்பதைப்போல் இனமுரண்பாடுகளை உருவாக்கும் பகிரங்க மேடைப்பேச்சுகள் மற்றும் ஊடகக் கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில், சட்டமா அதிபர் சட்டங்களைப் பேண வேண்டிய அதி உயர் ஸ்தானத்தில் இருப்பதால மேற்கூறிய சட்டத்தின் பிரகாரமும், பயங்கரவாதத் தடைச் சட்ட நடவடிக்கைகளின் கீழ் கூறப்பட்டுள்ள பிரிவுகளின் பிரகாரமும் இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கிழக்கு மாகாண சபை சட்டமா அதிபரைக் கோர வேண்டுமென வலியுறுத்தி இம்மாதத்திற்கான கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வில் எனது தனிநபர் பிரரேணையை முன்வைக்கவுள்ளதாக ஆரிப் சம்சுடீன் மேலும் குறிப்பிட்டார்.
weel done masha allah
ReplyDelete