ஐசிஸ் 'கலீபத்'' கடவுச்சீட்டு விநியோகம்
ஈராக் மற்றும் சிரியாவின் நிலப்பகுதியை கைப்பற்றி புதிய கலீபத் அல்லது இஸ்லாமிய பேரரசை அறிவித்த ஐசிஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் போராளிகள் தமது நிலப்பகுதிக்கான புதிய கடவுச்சீட்டை அறிமுகம் செய்துள்ளனர். பச்சை நிறத்திலான இந்த கடவுச்சீட்டின் மேற்பகுதியில் "இஸ்லாமிய கலீபத் தேசம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் பாகத்தில் "கடவுச்சீட்டு வைத்திருப்பவருக்கு தீங்கு ஏற்படுமாயின் அவரது சேவைக்கு படையினர் நிறுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரிய எல்லையில் இருக்கும் 11,000 பிரiஜகளுக்கு இந்த கடவுச்சீட்டு விநியோகிக்கப்படவிருப்பதாக ஐசிஸ் செய்திகள் குறிப்பிடுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டு மொசூல் நகரில் கட்டப்பட்ட அச்சகத்தின் மூலமே இந்த கடவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.
INTHA KADAVU SEETTU MUULAM AMERICA SELLALAAMA?
ReplyDelete