அனுராதபுரம் முதல், அலுத்கம வரை..!
இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து விதமான வண்முறைகளும் அராஜகங்களும் பகிரங்கமாகவே அரச அங்கிகாரத்துடனும் ஆதரவுடனும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றன. இந்நிலையில் இவற்றை எதிர் கொள்வதற்க்கு நாம் பல்வேறு விதமான ஜனநாயக வழிமுறைகளை முன்னெடுத்தும் அவைகள் எவ்விதப் பலனையும் நமக்குப் பெற்றுத் தந்ததாகத் தெரியவில்லை. மாறாக கடந்த சில நாட்க்களாக குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பள்ளி அல்லது வர்த்தக நிலையம் போன்ற ஏதாவதொன்று எரிக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டுள்ளது எனும்; செய்தியுடனேயே நாம் கண் விழிக்கின்றோம்.
அனுராதபுர அட்டப் பொக்குன ஸியாரத் தகர்புடன் ஆரம்பமான இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான அத்து மீறல்கள் இன்று அலுத்கமயில் இனக்கலவரமாகப் பரினாமம் பெற்று பல முஸ்லிம் உயிர்களையும் பல மில்லியன் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களையும் பலி கொண்டுள்ளதுடன் நூற்றுக்கனக்கான நம் சகோதரர்களை பாசிச கும்பல்களின் அடிதடிகளுக்கும் ஆளாக்கியுள்ளதானது இந்த நாட்டின் முஸ்லிம் விரோத போக்குடையக் காவிக் காடையர்களின் அராஜகத்தின் அதி உச்ச கட்ட வளர்ச்சியினைப் பறைசாட்டுவதாகவுள்ளது.
இந்நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதியவர்கள் வழமை போன்று சட்டத்தை யாரும் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அவரின் வழமையான பளய பல்லவியையே இம்முறையும் பாடிக் கொண்டிருக்கின்றார்.
அவ்வாறே ஏனைய அரசத் தலைவர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பௌத்த பிக்குகள் அரசத் தலைவர்கள் அதிகாரிகள் புத்திஜீவிகள் போன்றோரை உள்ளடக்கிய அமைப்பொன்றை ஏற்ப்படுத்தி குறித்தப் பிரதேசத்தில் இதன் பிறகு இவ்வாறான இனக்கலவரங்கள் ஏற்படாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவும் அவர்களின் பளய பல்லவிதான்.
உண்மையில் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டில் இனவாதம், இனக்கலவரம் போன்றவைகளை விரும்பவில்லை என்பது உண்மையாகவிருந்தால் அவர் செய்ய வேண்டிய முதற்பணி இவ்வாறான இனவாதங்களை அதிகாரபூர்வமாக அரங்கேற்றிக் கொண்டிருக்க்கக் கூடிய பொது பள சேனா என்ற அமைப்பைத் தடை செய்து அதன் செயலாளர் அதி பயங்கரவாதி ஞானசாராவைக் கைது செய்ய வேண்டும். அவ்வாறின்றேல் ஜனாதிபதி ஒரு நயவஞ்சகர் என்றே கூற வேண்டியுள்ளது.
ஏனெனில் இத்தகய வண்முறைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொது பள சேனா எனும் தீவிரவாத அமைப்புத் தடைசெய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கை சமாதான சகவாழ்வை விரும்பக் கூடிய அனைத்துத் தரப்பினர்களாலும் வலியுறுத்தப்பட்டடுக் கொண்டிருக்கின்றன என்றாலும் எக்காரணம் கொண்டும் பொது பள சேனா எனும் தீவிரவாத அமைப்புத் தடைசெய்யப்பட மாட்டாது அவ்வாறு தடை செய்யப்பட்டால் அவர்கள் கதாநாயகர்களாக மாறி விடுவார்கள் என்று இந்த நாட்டின் ஜனாதிபரியவர்கள் கூறியதாக சில ஊடகங்கள் கடந்த 21.06.14 அன்று செய்தி வெளியிட்டிருந்தன. ஜனாதிபதியவர்களின் இந்த கூற்றிலிருந்து பொது பள சேனா எனும் அமைப்புத் தீவிரவாத வில்லர்களின் அமைப்பு என்பதும் அவர்களை அரசு வில்லர்களாக வைத்துக் கொண்டிருக்கவே விரும்புகின்றது என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
இதே நேரம் அசாட் சாலியவர்களுக்கு முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்று நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை அரசின் இத்தகைய செயற்கள் அதன் இனவாதத்தின் அதி உச்ச நிலையைப் பறைசாட்டுவதாகவே உள்ளன.
அத்துடன் கடந்த 21.06.14 அன்று ஜனாதிபதியவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை அவசரமாக பதுளைக்கு அழைத்து ஒரு கலந்துரையாடல் நடாத்தியதாகவும் குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஸேட செய்தியொன்றை கூறுதல்இ யாராக இருந்தாலும் ஒரு இனத்தை தாக்கி பேசுவதை கண்டிப்பாக நிறுத்துதல்இ மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் மா அதிபர் ஏற்படுத்தல்இ ஒவ்வொரு வாரமும் அமைச்சர் பசில் ராஜபகசவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபே ராஜபக்சவின் பங்கு பற்றுதலுடன் சந்திப்பை ஏற்படுத்தி அந்த வாரத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற் கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்திவியிட்ள்ளன.
இந்நிலையில் மேற்படி கலந்துரையாடல் பதுளையில் அவசர அவசரமாக நடாத்தப்பட்டதற்கான காரணம் என்ன? ஏன் இத்தனை நாட்க்களாக அது கொழும்பில் நடாத்தப்படவில்லை? அவ்வாறே கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் ரிசாட் பதிய்யுத்தீன் அவர்களைக் கண்டித்தமைக்கான காரணம் என்ன? பதுளை கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டத் தீர்மானங்களை ஏன் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்க முடியவில்லை என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
இவையனைத்தும் ஜனாதிபதியவர்களின் வெறும் கண்துடைப்பும் நம்மை ஏமாற்றும் கைங்கரியமும் என்பதை நாம் புறிந்து கொள்ளுதல் அவசியமாகும். அது மட்டுமின்றி மேற்ப்படித் தீர்மானங்கள் எமக்கு எதிரானவையாகவே அமையும் என்பதும் இங்கே கவனிக்கபட வேண்டிய முக்கிய விடயமாகும்.
இந்தத் தீர்மானத்தின் மூலம் முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்புபவர்களை இனவாத்தைத் தூண்டினார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம்களை கைது செய்வதே இதன் நோக்கமாகும் என்றே கருத வேண்டி உள்ளது.
அடுத்ததாக ஊவா மாகாணத்திற்க்கான மாகான சபைத் தேர்தல் அண்மித்துக் கொண்டிருப்பதனாலும் ஊவா மாகான முஸ்லிம்கள் ஓரணியில் நின்று தமது பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ளும் முயற்ச்சியில் கரிசனைக் காட்டிக் கொண்டிருப்பதனாலும் முஸ்லிம்களை ஏமாற்றி மீண்டும் அந்த மாகானத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று பேரினவாதிகளை ஆட்ச்சியில் அமர்த்தும் ஒரு நயவஞ்சகத்தனத்தையே ஜனாதிபதியவர்கள் செயல்படுத்தப் பார்க்கின்றார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயமகம்.
எனவே நாம் தொடர்ந்தும் நமது தலைமைகளை விமர்சித்துக் கொண்டிருக்காது உடனடியாக நாம் களமிறங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நமது பொறுமையும் விட்டுக் கொடுப்பும் தொடர்ந்தும் நமக்குத் தோல்விக்கு மேல் தோல்விiயே தோற்றுவித்துக் கொண்ருக்கின்றன என்பதுவே கசப்பான உண்மையாகும் இந்நிலையில் தொடர்ந்தும் இதே வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்காது எமது அனுகு முறைகளில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையில் நாம் கடந்த பல மாத காலமாக நம் சமூகத்திடம் நம்மைப் நாமே பாதுகாத்துக் கொள்ள பொது மக்களாகி நாமனைவரும் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள முன் வரல் மிக அவசியமாகும் எனும் கருத்தை ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி வருவதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
எனவே மீண்டும் அந்தக் கருத்தினையே நாம் வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றோம் அவ்வாறின்றேல் நமது எதிர்காலம் மிகவும் அச்சம் நிறைந்ததாகவே ஆகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனையும் நாம் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
எனவே ஒரு முஃமின் ஒரு குழியில் இரண்டு முறைகள் விழ மாட்டான் எனும் நபி (ஸல்)அவர்களின் கூற்றுக்கிணங்க நாம் தொடர்ந்து இத்தகய நயவஞ்சகர்களை நம்பி ஏமாந்து விடாது மிகவும் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியமாகும். இவ்வளவு நடந்த பிறகும் நாம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிப்போமாக இருந்தால் உண்மையில் எமது ஈமானின் நிலை பற்றி நாம் மீழ் பரிசீலனைச் செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.
முனாப் நுபார்தீன்
உண்மை..! உண்மை..! இதுதான் உண்மை..! முஸ்லிம்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டு செயட்படுவார்கலானால் நிட்சயம் வெற்றி உண்டு. அதை விடுத்து அரசியல் சுயநல கும்பல்களின் கதையை கேட்டு மீண்டும் ராஜபக்ச அன் கோ வுக்கு வாகளிப்பார்கலானால், தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி கொட்டியவர்கள் ஆவார்கள்.
ReplyDeleteஒரு யதார்த்தமான உண்மையை எழுதியதற்கு முனாப் நுபார்தீன் அவர்களுக்கு மிக்க நன்றி. இதை பிரசுரித்த Jaffna Muslim இக்கும் நன்றிகள்.
Mahindakku wakkalippawan kafeer narskswaathi mahindakku wakkalippawanai kolluwathu muminkalin kadamai .salman rusthi taslima nasrin kalukku anna tandanayo athuthan mahindakku wakkalippawanukkum muslimkale usara irunkal .
ReplyDeleteதற்பொழுது அரசுடன் இணைந்திருக்கும் எந்தக்கட்சிக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஒருகாலமும் முஸ்லிம்கள் வாக்களிக்க கூடாது எனும் திண்ணமான முடிவினை எடுக்க வேண்டும்...!
ReplyDelete