யாழ்ப்பாண முஸ்லிம்களின் அலைக்கழிவு தொடருகிறது (படங்கள் இணைப்பு)
தினமும் நோன்பினை பிடித்துக்கொண்டு இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதற்காக கடும் வெயிலில் தினமும் காத்திருக்க வேண்டியுள்ளது.எமக்கு படிப்பறிவு இன்மை காரணமாக இவ்வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் எம்மை பல்வேறு வகையில் அலைக்கழிக்க வைக்கின்றனர் என அழுகின்றார் ஒரு முஸ்லீம் தாயொருவர்.
இது திரைப்படம் அல்ல இன்று யாழ் நகரின் மேற்கு பக்கத்தில் முஸ்லீம்கள் அதிகமாக குடியேறியுள்ள பகுதிகளில் வழமையாக நடைபெறுகின்ற ஒரு அசாதாரண நிகழ்வாகும். ஒரு விதத்தில் நிபந்தனைகள் என தெரிவித்து மக்கள் வழிநடத்தப்பட்டாலும் பல மக்களின் கருத்துப்படி அங்குள்ள யாழ் பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம் என்பவர் எம்மை (மக்களை) தேவையற்ற நிபந்தனைகளை உட்செலுத்தி இந்திய வீட்டுத்திட்டத்தில் இருந்து அம்மக்கள் விலகிக்கொள்ளும் வகையில் உடந்தையாக உள்ளார்.
இவரது செயற்பாடு காரணமாக பல முஸ்லீம் குடும்பங்கள் யாழ் மாவட்டத்தில் இருந்து மீண்டும் இடம்பெயர வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்க இப்பகுதியில் முள்ளந்தண்டுள்ள எவ்வித பொது அமைப்புகளோ அரசியல் தலைவர்களோ இல்லை.
இம்மக்கள் இந்தியன் வீட்டுத்திட்டத்தை பெற எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை அறிய அப்பகுதிக்கு ஊடகவியலாளர் என்ற வகையில் ஆராய சென்றிருந்தேன். அப்போது என்னிடம் பல்வேறு குறைகளை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்களது பரிதாப வார்த்தைகள் என் மனட்சாட்சியை கலங்க வைத்தது. ஆனால் இந்த அரச அதிகாரிகள், இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என தெரியவில்லை.
ஜே 87,ஜே 88 உள்ளிட்ட கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள 307 க்கு மேற்பட்ட முஸ்லீம் மக்கள் இவ்இந்திய வீட்டுத்திட்டத்திற்கு கிராம சேவகர் ஊடாகவும்,பொது அமைப்பின் ஊடாக விண்ணப்பித்தும் எவ்வித பயனுமில்லை. ஏனெனில் தற்போது இரு கிராம சேவகர் பிரிவிலும் அண்ணளவாக 75 க்கும் குறைவாக முஸ்லீம் மக்களுக்கு மாத்திரம் இத்திட்டத்தில் வீடு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment