இலங்கைக்கு அள்ளிக்கொடுப்பதில் ஜப்பான் சாதனை - குவைத் மூன்றாமிடம்
இலங்கைக்கு 2014ம் ஆண்டு அதிக கடன்களை வழங்கிய நாடுகள் வரிசையில் ஜப்பான் முதலிடம் பெற்றுள்ளது.
புதிய பாலம் ஒன்றுக்காக 342 .8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதுடன் இந்த முதல் இடத்தை ஜப்பான் பெறுகிறது.
இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை, 678.2 மில்லியன் டொலர்களை பல நாடுகளில் இருந்தும் கடன்களாக பெற்றுள்ளது.
இதன்படி சீனாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர்களும் குவைத்திடம் இருந்து 10 மில்லியன் டொலர்களும் அடங்குகின்றன.
ஜப்பானின் கடன்கள் யாவும் வங்கி வட்டியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
குவைத்தின் கடன் 0.5 வட்டிவீதத்தில் 15 வருட திருப்பிச் செலுத்துகை உடன்படிக்கையில் வழங்கப்படுகின்றன.
இதனைத்தவிர ஈரான், ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்தியா உட்பட்ட நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு கடன்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை 2014ம் ஆண்டு இலங்கை 1279 மில்லியன் டொலர்களை 31சதவீத வட்டியில் திருப்பி செலுத்தவேண்டியுள்ளது.
Whoever gives something rajapaksa and bro's filling there pocket, the public must pay the loan with interests.
ReplyDelete