இரண்டு கூட்டணிகளுக்கு எதிராக, பாரிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் - அனுரகுமார திசாநாயக்க
நாட்டு மக்களுக்காக விரிவான புதிய அரசியல் முன்னணியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
தற்போது செயற்படும் அரசியல் முன்னணிகள், பொதுமக்களை வெற்றிகொள்ளச் செய்வதற்கு அசமந்தமாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்கு தயாராகியுள்ளது.
அதேபோன்று மறுபக்கத்தில் எதிர்கட்சி புதிய போராட்டத்திற்கு ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அரசியல் களத்தில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் உருவாக்க முடியாது என்றும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எனவே, இரண்டு கூட்டணிகளுக்கும் எதிராக பாரிய கூட்டணியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment