Header Ads



முஸ்லிம் சமூகத்தின் பலமும், பலவீனமும்..!

அல்ஹாபிழ் ஸஹ்றான் (மஸ்ஊதி)

கிழக்கில் வாழும் ஒரு முஸ்லிம் சகோதரனின் காலில் முள் தைத்தாலும் மேற்கில் வாழும் முஸ்லிம் அதன் வலியை உணரும் அந்த பற்றும், பாசமும் எப்படித் தோன்றியது?

இந்த ஒற்றுமையும் சகோதரத்துவ வாஞ்சையும் நமது சமூகத்திற்கு எப்படி வந்தது? எங்கிருந்து உருவானது?

இது எந்த சமூகத்திலுமில்லாத தனித்துவமான ஒரு பலமில்லையா? இதனையே முஸ்லிம் சமூகத்தின் முதலாவது பலமாக இங்கு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக மேற்கு நாடுகளில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் தூய்மையான வாழ்வும், அவர்களின் நன்னடத்தைகளும் இன்று முஸ்லிம் சமூகம் மற்றைய கொள்கைவாதிகளால் மதிக்கப்படுவதற்கு அடிப்படையாகத் திகழுகின்றது. இதேவேளை இப்பலத்தினால் இஸ்லாத்தை வளர்க்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன.

முஸ்லிம் சமூகம் - அது தனித்துவமான ஒரு சமூகம்.  அதன் செல்வாக்கும், சிறப்பும் வார்த்தைகளால் சொல்லிமாளாது. நடு நிலை சமுதாயமாகவும், சிறந்த சமுதாயமாகவும் அல்குர் ஆன் குறிப்பிடும் ஒரே சமூகம் இந்த முஸ்லிம் சமூகம் தான். (பார்க்க:  அல்குர் ஆன்: 2:143) 

மனித குலம் சிருஷ்டிக்கப்பட்ட காலம் தொட்டு இச்சமூகம் இன்று வரை இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றது. பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட நமது சமூகத்தின் பலமும், பலவீனமும் ஒவ்வெரு முஸ்லிமும் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை.  அப்போது தான் நாம் அடைய எத்தனிக்கும் இலக்குகளை துல்லியமாகவும்,  இலகுவாகவும் அடையமுடியும். முஸ்லிம் சகோதரர்களைப் பொருத்தமட்டில் நமது சமூகத்தின் பலத்தை மாத்திரமே அதிகமாகப் பேசுகின்றார்கள். 

நமது பலவீனம் அதிகமாகப் பேசப்படுவதில்லை.  நமது தவறான இப்போக்கு நீடிக்கும் பட்சத்தில் நிரந்தர வீழ்ச்சிக்கு நமது சமூகம் சென்று ஈருலகிலும் தோல்வியடைய அதிக வாய்ப்புள்ளது. ஆகவே இக்கட்டுரை முஸ்லிம் சமூகத்தின் பலத்துடன் சேர்த்து பலவீனத்தையும் பேசுகின்றது.

முஸ்லிம் சமூகத்தின் பலத்தைப் பொருத்தமட்டில் வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். டென்மார்க்கில் நபிகளாரைக் கேவலப்படுத்தி கேலிச்சித்திரம் வரையப்பட்டால் சர்வதேசம் பூராக வாழும் நமது சன்மார்க்கவாதிகள் அதற்கெதிராய் கொதித்தெழும்புகின்றனர். பலஸ்தீனத்தில் நமது உறவுகள் யூத பாசிஸவாதிகளால் அநியாயமாகப் பறிக்கப்பட்டால் நாம் இங்கு பதறிப்போய் விடுகின்றோம்.

எங்கோ இருக்கும் பாபரி மஸ்ஜிதுக்காக இங்கு நமது சகோதரர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.இந்த ஒற்றுமையும் சகோதரத்துவ வாஞ்சையும் நமது சமூகத்திற்கு எப்படி வந்தது?  எங்கிருந்து உருவானது?  கிழக்கில் வாழும் ஒரு முஸ்லிம் சகோதரனின் காலில் முள் தைத்தாலும் மேற்கில் வாழும் முஸ்லிம் அதன் வலியை உணரும் அந்த பற்றும், பாசமும் எப்படித் தோன்றியது?  இது எந்த சமூகத்திலுமில்லாத தனித்துவமான ஒரு பலமில்லையா? இதனையே முஸ்லிம் சமூகத்தின் முதலாவது பலமாக இங்கு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.

இந்தப் பலத்தினால் நாம் நிறைய சாதிக்கலாம். தூய இஸ்லாத்தை இதனை மேற்கோல் காட்டியே வளர்த்திடலாம். இது இனத்துவத்தின் அடிப்படையில் உருவானது என்று தவறாகவும் அர்த்தப்படுத்தக் கூடாது. ஏனெனில் இது மகத்துவமிக்க அந்த இறைவனால் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட ஈமானிய பலம். இந்த பலத்தினால் யூத, கிறிஸ்தவர்களின் பல சாம்ராஜ்யங்களை வீழ்த்தி முஸ்லிம்கள் ஆண்டதாக நம்பகமான வரலாற்று ஏடுகளில் காணுகின்றோம்.

இந்த பலத்தை முஸ்லிம் சமூகத்தைத் தவிர யாருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. இந்த பலத்தினால் தான் இன்னமும் முஸ்லிம்கள் மேற்குநாடுகளில் ஏதோ தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். ஒரே சமூகம், ஒரே அணி, ஒரே கலாச்சாரம் போன்றன முஸ்லிம்களின் பலம்.  திருமறைக் குர்ஆனிலும் அல்லாஹ் இதனை பின்வருமாறு வலியுருத்துகின்றான்.

''உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான்.'' (அல் குர் ஆன்:61:4)

முஸ்லிம் சமூகத்தின் பலத்தை அடையாளப்படுத்தும் போது ''முஸ்லிம்களில் அதிகமானோரின் நன்னடத்தைகளையும்'' இங்கு கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளது. முஸ்லிமாக ஒருவன் இருந்தால் அவன் மதுபானம் அருந்தமாட்டான், விபச்சாரத்தில் இறங்கமாட்டான், அந்நிய ஆடவர்களோடு முஸ்லிம் பெண்கள் சகஜமாகப் பழகமாட்டார்கள், முஸ்லிம் பெண்கள் ஒழுக்கமானவர்கள், முஸ்லிம்களின் வாழ்வு தூய்மையானது போன்ற பல நல்லெண்னங்கள் இன்னும் மாற்றுமத மக்களிடம் மேலோங்கி இருப்பதானது முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய பலம். (விதிவிலக்காக சில முஸ்லிம்களின் வாழ்வு அமைந்திருக்கலாம்.)

குறிப்பாக மேற்கு நாடுகளில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் தூய்மையான வாழ்வும், அவர்களின் நன்னடத்தைகளும் இன்று முஸ்லிம் சமூகம் மற்றைய கொள்கைவாதிகளால் மதிக்கப்படுவதற்கு அடிப்படையாகத் திகழுகின்றது. இதேவேளை இப்பலத்தினால் இஸ்லாத்தை வளர்க்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன.

அல்லாஹ்வுடைய தூதரின் வாழ்வை ஆய்வுக்குட்படுத்தும் ஒரு மேற்கத்தைய ஆய்வாளர் பின்வருமாறு கூறி வியக்கின்றார். ''குருகிய காலத்திற்குள் இஸ்லாம் எனும் கொள்கையை காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த அந்த அரபு மக்களிடம் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படி வளர்க்க முடிந்தது என்று ஆய்வுக்குட்படுத்திய போது அங்கு பிரச்சாரத்தை விட முஹம்மதின் பண்பாட்டு விழுமியமெனும் பலத்தினாலேயே கூடுதலாக இஸ்லாம் எனும் கொள்கை குருகிய காலத்திற்குள் வளர்ந்தது எனும் பேருண்மையை நான் கண்டுகொண்டேன்.'' என்கிறார்.

அதேபோன்று தான் அல்லாஹ் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கியிருக்கும் மகத்தான பலங்களில் ஒன்று ''மத்திய கிழக்குப் பகுதியில் ஊற்றெடுக்கும் பெற்றோலிய வளம்''.  இவ்வளத்தினால் இன்று எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் இலாபம் பெறுகின்றனர். தனித்துவமாக ஒருவர் சிறந்து விளங்குவதற்கு பொருளாதாரம் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு சமூகத்தின் இருப்பை நிலைத்திருக்கச் செய்வதில் பொருளாதாரத்திற்கு அளப்பெரிய பங்குள்ளது. முஸ்லிம் சமூகத்தின் சுயத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் இப்பலத்தை நாம் உதாசீனம் செய்ய முடியாது. ஏனெனில் இப்போற்றோலிய அருட்கொடையால் இந்த சமூகம் பல்வேறு இலாபங்களை இன்று ஈட்டிவருகின்றது.

மேற்குறித்த பலம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளும் அதேவேளை நமது சமூகத்தின் பலவீனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் இன்றைய முதலாவது பலவீனம் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழாமை.

திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் இதுபற்றிக் குறிப்பிடுகையில் ''நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்!  நீங்கள் முஸ்லிமாகவே தவிர மரணிக்காதீர்கள்'' (அல்குர்ஆன்:3:102) எனக்கூறுகின்றான்.

இன்று நாம் அதிகமான இடங்களில் பலவீப்படுவதற்கு அடிப்படைக் காரணம் நபிவழியை நமது வாழ்வில் பின்பற்றாமல் யார் யாரோ சொன்ன சட்டங்களைஅங்கீகரித்திருப்பது தான் என்பது நூற்றூக்கு நூறு வீதம் உண்மையானதும் நிரூபணமானதுமாகும்.

நமது பலவீனம், நாம் கொள்கையில்லாமல் வாழ்வதும் ஆதாரமில்லாத மார்க்கக்கருத்துக்களை அங்கீகரிப்பதும், சமூக ஒற்றுமையைக் காரணம் காட்டி தூய இஸ்லாத்தில் விட்டுக் கொடுப்பு செய்வதும்தான் அன்றி வேறில்லை. இப்பலவீனம் எம்மில் மிகைத்திருக்கும் எக்காலமும் நாம் முன்னேற முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடத்தில் ஆன்மீகத் தெளிவும் ஆரோக்கியமான கொள்கைப் பற்றும் இல்லாத போது அல்லாஹ்வின் வெற்றி நமக்கு எங்கே கிடைக்கப்போகின்றது?

இதற்காக முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையையும் அன்றைய நபித்தோழர்களான அந்த முஸ்லிம்களின் நிலையையும் ஒரு ஒப்பு நோக்கு செய்வோம். அன்று முஸ்லிம்களிடம், எம்மிடம் இன்றிருப்பது போன்ற பலம் கிடையாது. ஈமானிய பலத்தோடு சேர்த்து தெள்ளத் தெளிவான தூய இஸ்லாம் அவர்களிடம் இருந்தது. அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். எண்ணவும், எழுதவும் தெரியாத அம்மக்கள் பெரும் பெரும் சம்ராஜ்யங்களைக் கூட ஆண்டார்கள்.

இன்று சில சகோதரர்கள் ''இஸ்லாமிய ஆட்சியே முதலில் வேண்டும் பின்னர் தான் மற்றவைகள்'' எனும் தோரணையில் தமது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வடிப்படை முற்றிலும் தவறானது. ஏனெனில் சீரிய கொள்கைவாதிகளால் தான் சிறப்பான ஒரு ஆட்சியை இப்பூமிப் பந்தில் மலரச் செய்ய முடியும் .இக்கருத்தை நாம் சொல்லவில்லை திருமறையில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

''அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதற்காகவும்,அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதற்காகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதற்காகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள். '' (அல்குர் ஆன்:24:55)

இறை செய்திகளான அல்குர் ஆன், ஸஹீஹான ஹதீஸ்களெனும் தெள்ளத் தெளிவான இரண்டு அடிப்படைகளை மாத்திரம் எப்போது முஸ்லிம் சமூகம் நூறு வீதம் கடைப்பிடிக்கின்றதோ அப்போது தான் நாம் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றி பெற்றவர்களாகத் திகழ முடியுமென்பதை மேற்கண்ட வசனம் நமக்குச் சொல்லித் தருகின்றது.

முஸ்லிம் சமூகம் அது தனித்துவமான ஒரு சமூகம். அதன் செல்வாக்கும், சிறப்பும்வார்த்தைகளால் சொல்லிமாளாது. நடு நிலை சமுதாயமாகவும், சிறந்த சமுதாயமாகவும் அல்குர் ஆன் குறிப்பிடும் ஒரே சமூகம் இந்த முஸ்லிம் சமூகம் தான். (பார்க்க: அல்குர் ஆன்: 2:143) 

''கலாச்சாரங்களில் சிறந்த கலாச்சாரம் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கலாச்சாரம்.'' அக்கலாச்சாரத்தினால் மாத்திரமே நாம் சிறப்போடும் துணிவாகவும் வாழ முடியுமென்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களின் பலம் எது? பலவீனம் எது? என்ற தெளிவான அறிவை நமக்குத் தந்து வஹியை மாத்திரம் பின்பற்றும் உத்தமர்களாக நம்மனைவர்களையும் ஆக்கியருள்வானாக!

2 comments:

  1. JM, better if we can put the banner as slaves of Allah.

    ReplyDelete
  2. Aameen yarabbulaalameen Alhafil zahran ur article at.the movement correcr & need to know all of our muslim in srilanka. Thanks .AllahuAkkabar

    ReplyDelete

Powered by Blogger.