Header Ads



'பௌத்த பிக்குகள் பொல்லுகளுடன் மக்களை அச்சுறுத்துகின்றனர், ஞானசாரர் பௌத்தத்தை இழிவுபடுத்துகிறார்'

மாலம்பே சீலரட்ன தேரர்  பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் பௌத்த மதத்தையே இழிவுபடுத்தி வருகின்றார் என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் துணைத் தலைவர்  மாலம்பே சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகள் குண்டர்களைப் போன்று செயற்பட மாட்டார்கள் எனவும், இவர் ஒட்டுமொத்த மத விழுமியங்களையும் அபகீர்த்தி படுத்தி வருவதாகவும் சீலரட்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்த பிக்குகள் கருணையை போதிக்க வேண்டியவர்கள் எனவும் தற்போது ஒரு சில பௌத்த பிக்குகள் பொல்லுகளுடன் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளை குண்டர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சமூகம் நோக்கும் அளவிற்கு மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா, கலபொடத்தே ஞானசார தேரர் போன்றவர்கள் பௌத்த மதத்தையும், பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகளை 90 வீதமான பௌத்த பிக்குகள் அங்கீகரிப்பதில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளர்.

இவ்வாறான ஓர் நிலைமை நீடித்தால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பௌத்த துறவறத்திற்காக வழங்க மாட்டார்கள் எனவும், இது குறித்து மாநாயக்க தேரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவுடன் தொடர்பில்லை என குறிப்பிட பாதுகாப்புச் செயலாளர் எதற்காக நீண்டகாலத்தை எடுத்துக் கொண்டார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுபல இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. உண்மையாக உள்ள தேரர்களும் நல்லெண்ணம் கொண்ட பெளத்த உறவினரும் இவ்வுண்மையை தற்போது உணர்ந்துள்ளமையை இட்டு மிகவும் சந்தோசம். இது தொடராமல் இருக்க உமது முழு முயற்சியுடன் அக்காடையர் கூட்டத்தை விரட்டியடிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. Government is supporting BBS and growing so who will stop this group. Defence secretary is helping the BBS

    ReplyDelete
  3. மனிதாபிமானம் உள்ள மாலம்பே சீலரட்ன தேரர் அவர்களுக்கு எனது தனிப்பட்ட ரீதியான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  4. jazakallahu hairah thanking you

    ReplyDelete

Powered by Blogger.