Header Ads



பாதுகாப்பு அமைச்சு தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயல்படுகிறது - சட்டத்தரணிகள் கூட்டமைப்பு

இலங்கையில் கருத்துச் சுதந்திரம், பிரஜைகளின் அமைப்புகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ரீதியிலான அதிகாரம் எதுவம் பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் பாதுகாப்பு அமைச்சு தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயல்படுகிறது என சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு விடுத்தள்ள அறிக்கை தொடர்பாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிவில் அமைப்புகளுக்கு செய்தியாளர் மாநாடுகளை . செயலமர்வுகளை, ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதற்கு உரிமையில்லை என பாதுகாப்பு அமைச்சு கருதுவது அதனுடைய செய்திக்குறிப்பின் மூலம் புலனாகின்றது. 

ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் சகல அரசாங்கங்களும் இவ்வாறான சட்டபூர்வமான செயற்பாடுகளில் தனது பிரஜைகள் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை மதிக்கின்றன. சர்வாதிகார அரசுகள் மாத்திரம் இதனை தடுக்கினறன. இலங்கை அரசாங்கம் தனது ஜனநாய இயல்புகளை பாதுகாக்க விரும்பினால் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை அது மதிக்க வேண்டும்.

பொது உரிமைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு மட்டுப்படுத்தப்பட்ட அளவே அறிந்துள்து எனபதற்கு அதன் ஊடக அறிக்கை சான்றாகவுள்ளது. இலங்கை ஒரு ஏதேச்சதிகார நாடக மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை இவ்வாறக வெளியிடப்படும் அறிக்கைகள் உறுதிசெய்கின்றன எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. gtn

1 comment:

  1. Is Sri Lanka Democratic Country?? yes it was till 2004.

    ReplyDelete

Powered by Blogger.