Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த தலாய்லாமாவை கண்டிக்கும் பௌத்த தேரர்


திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது என தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்கள பௌத்தர்களினால் ஒடுக்கப்படுவதாக தலாய் லாமா குற்றம் சுமத்தியிருந்தார்.

உண்மையான தகவல்கள் தெரியாமல் இவ்வாறான கருத்துக்களை வெளியிடக் கூடாது.

தலாய் லாமாவின் இந்தக் குற்றச்சாட்டு உள்நாட்டில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும்.

பௌத்த தலைவரான தலாய் லாமாவை பிழையாக வழிநடத்தி இந்த கருத்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்களின் அடிப்படையில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக் கூடிய வகையில் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை வாழ் சிங்கள பௌத்தர்கள்,  மத ரீதியான கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்த செயற்படுகின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, தூதுவராலயங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டுமென அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.