சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - ரணில் விக்கிரமசிங்க
புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் முகமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது புத்தளம் நகர், கந்தக்குளி மற்றும் புத்தளம் பகுதியிலுள்ள இடங்களுக்குச் சென்று மக்களுடனான சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு பேசுகையில்
தற்போது சிறுபான்மை இனத்தவர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் இன ஒன்றுமையாக வாழ்ந்த சூழல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனங்களுக்கிடையிலான ஒன்றுமையை சிதைப்பதற்கு இடமளிக்க முடியாது. அரசாங்கம் அடிப்படைவாதத்தை தூண்டிவிட்டு இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கி அரசியல் லாபம் தேடிக் கொள்ள முற்படுகின்றது. சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இதன் ஒரு அங்கமே பேருவளை பிரதேசத்தில் நடந்த வன்முறையாகும். இந்த வன்முறை அவ்வூர் மக்களால் ஏற்படுத்தப்படவில்லை. வெளியிடங்களிலிருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது. பேருவளையில் பதற்ற நிலை உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் வெளியிலிருந்து வந்த குழுவொன்று அங்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது யார்? அங்கு நடைபெற்ற வன்முறையால் பாரிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் எந்த இனம் மற்றும் மதத்தவராயினும் இலங்கையர் என்ற ரீதியில் கணிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என வேற்றுமை பாராது சகலரும் யாவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு நாங்கள் மக்கள் வெற்றியெனும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
ADUTHA PRASIDENT RANIL THAN
ReplyDelete