உலகின் மிக உயரமான இளம்பெண்:துருக்கியை சேர்ந்த ருமேசா
துருக்கியை சேர்ந்த, ருமேசா கெல்கி, 17, என்னும் இளம்பெண், உலகிலேயே மிகவும் உயரமான பெண்ணாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்
பெற்றுள்ளார்.அப்துல்லா குல் தலைமையிலான துருக்கியின் சபரான்போலுா நகரில், பெற்றோர் மற்றும் சகோதரர், சகோதரியுடன் ருமேசா வசிக்கிறார்.தற்போது, பிளஸ் 1 வகுப் பில் படிக்கும் ருமேசாவுக்கு, 'வீவர் சிண்ட்ரோம்' என்னும் நோயின் காரணமாக, வயதுக்கு மீறிய, உடல் வளர்ச்சி ஏற்பட்டது. ஏழு அடிக்கும் அதிகமான உயரம் காரணமாக, ருமேசாவால் நடக்க முடியவில்லை. இவருக்காக சக்கர நாற்காலி தயாரிக்கப்பட்டுள்ளது. இவர் அணியும் செருப்புகள், அமெரிக்காவில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன.
தன்னுடைய உயரம் குறித்து ருமேசா கூறியதாவது:மிகவும் உயரமாக இருந்ததால், பார்த்தவர்கள் கேலி செய்தனர். ஆனால், இதனால் கிடைக்கும் வசதியைக் கண்டு, முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி விட்டனர். மற்றவர்களிடம் இருந்து தனியாக தெரிவது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உயரமான இடத்தில் உள்ள பொருட்களை, எளிதாக எடுத்து தர முடிகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், ருமேசாவின் பெயர் சேர்க்கப்படுவதற்கான சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment